ரூ.3,250 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு; சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை ஐசிஐசிஐ வங்கித் தலைமை அதிகாரி கணவருடன் கைது

ரூ.3,250 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு; சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை ஐசிஐசிஐ வங்கித் தலைமை அதிகாரி கணவருடன் கைது

2 mins read
d45dd488-60b0-45c0-a22d-16bb5690046f
-

புது­டெல்லி: பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாகப் பெற்று மோசடி செய்த வழக்கின் தொடர்­பில் ஐசி­ஐ­சிஐ வங்­கி­யின் முன்­னாள் தலை­மைச் செயல் அதி­காரி சந்தா கோச்­சா­ரை­யும் அவ­ரது கண­வர் தீபக் கோச்­சா­ரை­யும் சிபிஐ அதிகாரி­கள் கைது செய்­துள்ளனர்.

இந்­தி­யா­வின் மிகப்­பெ­ரிய ஐசி­ஐ­சிஐ தனியார் வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­ந­ரா­க­வும் செயல்­பட்ட சந்தா கோச்­சார், தன் பத­வி அதி­கா­ரத்தை முறை­கேடா­கப் பயன்­படுத்தி வீடி­யோ­கான் குழு­மத்­துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­தக் கடன் பரி­வர்த்­த­னை­யின் மூலம், சந்தா கோச்­சா­ரின் கண­வர் தீபக் கோச்­சா­ரும் அவ­ரது உறவினர்­களும் பெரு­ம­ள­வில் பலன் அடைந்­த­தா­க­வும் கடந்த 2018ல் தகவல்கள் அம்பலமாகின.

கடந்த 2009 முதல் 2011ஆம் ஆண்டு வரை பத­வி­யில் இருந்த காலகட்டத்­தில் சந்தா கோச்­சார், வீடி­யோ­கான் நிறு­வ­னத் தலை­வர் வேணு­கோ­பால் தூத் உள்­ளிட்­டோ­ருக்கு சட்­ட­வி­ரோ­த­மாக 1,875 கோடி ரூபாய் கட­னு­தவி வழங்க உத்­த­ர­விட்­டார்.

பின்­னர், அந்­தக் கடன் தொகை சந்தா கோச்­சா­ரின் கண­வர் நடத்தி வந்த 'நியூ பவர் சுப்­ரீம் எனர்ஜி' என்ற நிறு­வ­னத்­திற்கு பல்­வேறு தவ­ணை­க­ளாக மாற்­றிவிடப்­பட்­டது.

அத்­து­டன், சந்தா கோச்­சா­ரின் பத­விக் காலத்­தில் வீடி­யோ­கான் நிறு­வ­னத்­திற்கு கொடுக்­கப்­பட்ட கடன் தொகை, திரும்பி வராக் கடன் தொகை­யாக அறி­விக்­கப்­பட்­டது. இத­னால், ஐசி­ஐ­சிஐ வங்­கிக்கு 1,730 கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டது.

இதையடுத்து, பல்­லா­யி­ரம் கோடி ரூபாய் ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் கார­ண­மாக, கடந்த 2018ல் ஐசி­ஐ­சிஐ வங்­கி­யின் தலை­மைச் செயல் அதி­காரி, நிர்­வாக இயக்­கு­நர் பத­வி­யில் இருந்து சந்தா கோச்­சார் வில­க்கப்பட்டார்.

இத­னைத்­தொ­டர்ந்து வீடி­யோ­கான் கடன் மோசடி வழக்கை சிபிஐயும் அம­லாக்­கத்­து­றை­யும் விசா­ரணை நடத்தி வந்­தன.

இவ்­வ­ழக்­கில் கடந்த ஆண்டு அம­லாக்­கத்­து­றை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்ட சந்தா கோச்­சார், பின்­னர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், தனது பத­வியை தவ­றா­கப் பயன்­ப­டுத்தி கடன் மோசடியில் ஈடுபட்டது தொடர்பில் சந்தா கோச்­சா­ரை­யும் அவ­ரது கண­வர் தீபக் கோச்­சா­ரை­யும் சிபிஐ இப்போது கைது செய்­துள்­ளது.

டெல்­லி­யில் விசா­ர­ணைக்கு முன்னிலையான இரு­வ­ரை­யும் சிபிஐ அதி­கா­ரி­கள் அதிரடியாகக் கைது செய்தனர். இரு­வ­ரின் சொத்து­களை­யும் அம­லாக்­கத்­துறை முடக்கி­யுள்­ளது.