பெங்களூரில் 8 நாள்களுக்கு நடக்கும் தமிழ் புத்தகத் திருவிழா

பெங்களூரில் 8 நாள்களுக்கு நடக்கும் தமிழ் புத்தகத் திருவிழா

1 mins read
2ad67b9e-4cdf-4b77-bbff-285a3e8891c4
-

பெங்களூர்: பெங்களூருவில் முதல்முறையாக நடந்து வரும் தமிழ் புத்தகத் திருவிழாவில் ஏராளமான தமிழர்கள் குடும்பத்தோடு திரண்டு வந்து புத்தங்களை வாங்கிச் சென்றனர்.

பெங்களூரு தமிழ்ச் சங்க வளாகத்தில் எட்டு நாள்கள் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவை அறிவியல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ் படித்ததால்தான் விண்வெளித் துறையில் என்னால் சாதிக்க முடிந்தது," எனத் தெரிவித்தார்.

"நாம் நம் தாய்மொழியை, வேர்களாக இருக்கும் மொழியை மறக்கக் கூடாது. நான் படித்தது என் சொந்த ஊரான கோவையில்தான். நான் படித்தது தமிழ் வழி கல்வி. தாய்மொழி தமிழில் படித்ததால்தான் சாதித்துள்ளேன்," என மயில்சாமி தெரிவித்தார்.

விழாவில் பங்கேற்ற சிவாஜி நகர் எம்எல்ஏ ரிஸ்வான் அர்சத் பேசும்போது, தமது தொகுதியில அதிக அளவில் தமிழர்கள் வசிப்பதால் அவர்களுடன் உணர்வுபூர்வமாக பேச தமிழ் மொழியைக் கற்று வருவதாக தெரிவித்து கைதட்டல் பெற்றார். விழாவில் 25 பதிப்பகங்கள் அரங்குகள் அமைத்துள்ளன.