'மது அருந்துவோருக்கு பெண் கொடுக்கக்கூடாது'

'மது அருந்துவோருக்கு பெண் கொடுக்கக்கூடாது'

1 mins read
a1f8d92d-75cc-42bf-86b2-3610d3d9d17c
-

லக்னோ: உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் நடந்த நிகழ்வு ஒன்­றில் மத்­திய அமைச்­சர் கௌஷல் கிஷோர் பேசிய­போது, மது அருந்­து­வோ­ருக்கு பெண்­ணைத் திரு­ம­ணம் செய்து வைக்­கா­தீர்­கள் என வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

குடிப்­ப­ழக்­கம் தன் மக­னைக் கொன்­றதை நினைவுகூர்ந்த மத்­திய அமைச்­சர், குடி­கா­ரர்­க­ளுக்கு மகள்­களை அல்­லது சகோ­த­ரி­களை திரு­ம­ணம் செய்து வைக்­க­வேண்­டாம் என்­றும் மக்­க­ளைக் கேட்­டுக் கொண்­டு­ள்ளார்.

குடிப்­ப­ழக்­கத்­தால் தன் மகன் உயி­ரி­ழந்­த­து முதல் புகை­யிலை, மது இல்லாத நாட்டை உரு­வாக்கு ­வ­தற்­கான இயக்­கத்தை கௌஷல் கிஷோர் நடத்தி வருகிறார்.

இந்­நி­லை­யில், எதிர்­வ­ரும் புத்­தாண்டை போதை­யில்லா ஆண் டாகக் கொண்­டாட வேண்­டும் என்­பதே தனது லட்­சி­யம் என­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

மது அருந்­தும் ஒரு அதி­கா­ரியை விட ஒரு ரிக்­‌ஷாக்காரர் அல்­லது கூலித் தொழி­லாளி சிறந்த மணமகனாக விளங்குவார் என்­றும் கௌஷல் கிஷோர் கூறி­னார்.

"இந்­தி­யா­வில் 272 மாவட்­டங் களில் போதைப்­பொ­ருள் புழக்­கம் அதி­க­மாக உள்­ள­தாக அரசு அடை­யா­ளம் கண்­டுள்­ளது. இதன் தீமை­கள் குறித்து மாண­வர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வூட்ட வேண்­டும். விரை­வில் நாடு புகை­யிலை, போதைப் பொருள், மது­ இல்­லாத நாடாக மாறும்," என்­றார் அவர்.