நால்வர் பலி; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு மருந்து ஆய்வகத்தில் தீ விபத்து

நால்வர் பலி; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு மருந்து ஆய்வகத்தில் தீ விபத்து

2 mins read
44ce00c5-5b9b-4137-9945-1582aa9e594b
-

விசா­கப்­பட்­டி­னம்: ஆந்­தி­ரா­வில் உள்ள பார்மா நிறு­வன ஆய்­வ­கத்­தில் திடீ­ரென ஏற்­பட்ட தீ விபத்­தில் நால்­வர் பலி­யா­கி­னர். காய­ம­டைந்த வர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

உயி­ரி­ழந்த ஊழி­யர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு ரூ. 25 லட்­சம் ரூபாய் இழப்­பீ­டாக வழங்­கப்­படும் என முதல்­வர் ஜெகன் மோகன் ரெட்டி அறி­வித்­துள்­ள­தாக மாநில தொழில்­துறை அமைச்­சர் அமர்­நாத் தெரி­வித்­துள்­ளார்.

பரா­ம­ரிப்­புப் பணி­யின்­போது இந்த தீவி­பத்து நிகழ்ந்­த­தாக காவ­லர்­கள் தெரி­வித்­த­னர்.

ஆந்­திர மாநி­லம், அனக்கா பள்ளி மாவட்­டம், பர­வாடா பகு­தி­யில் தனி­யார் நிறு­வ­னத்­திற்­குச் சொந்­த­மான மருந்து தயா­ரிக்­கும் தொழிற்­சாலை இயங்கி வரு­கிறது. இதில் உள்ள மூன்­றா­வது பிரி­வில் திடீ­ரென பற்­றிய தீ மள­ம­ள­வென பர­வி­யது.

தீயை அணைப்­ப­தற்­குள் அந்­தப் பிரி­வில் இருந்த பல கோடி மதிப்­பி­லான அனைத்து உப­க­ர­ணங் களும் எரிந்து நாச­மா­னது.

அரு­கில் இருந்த ரப்­பர் கிடங்­கி­லும் தீ பற்­றி­ய­தால் கரும்­புகை சூழ்ந்து, அங்கு வேலை செய்து கொண்­டி­ருந்த ஊழி­யர்­க­ளுக்கு மூச்­சுத் திண­றல் ஏற்­பட்டு மயங்கி விழுந்­த­னர்.

அங்­கி­ருந்த ஒரு சில ஊழி­யர்­கள் அலறி அடித்­துக்­கொண்டு வெளியே ஓடி­னர். 10க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் தீவி­பத்­தில் சிக்­கிக்­கொண்­ட­னர்.

அனக்கா பள்ளி தீய­ணைப்­புத் துறை­யி­னர் சம்­பவ இடத்­திற்கு வந்து பல மணி நேரம் போராடி தீயைக் கட்­டுக்­குள் கொண்டு வந்­த­னர்.

தீய­ணைப்பு வீரர்­கள் உள்ளே சென்று பார்த்­த­போது அங்கு 4 ஊழி­யர்­கள் அடை­யா­ளம் தெரி­யாத அள­வுக்கு உடல் கரு­கிய நிலை­யில் இறந்து கிடந்­த­னர்.

ஐந்­துக்­கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் பலத்த காயங்­க­ளு­டன் உயி­ருக்­குப் போரா­டிக்கொண்டு இருந்­த­னர்.

காய­ம­டைந்­த­வர்­களை மீட்ட தீய­ணைப்புத் துறை­யி­னர் சிகிச்­சைக்­காக விசா­கப்­பட்­டி­னம் அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர்.

விபத்து குறித்து அனக்கா பள்ளி காவ­லர்­கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

இந்­திய மருந்து தயா­ரிப்பு நிறு­வ­ன­மான லாரஸ் லேப்ஸ் கூறு­கை­யில், இந்­திய நக­ரங்­க­ளான ஹைத­ரா­பாத் உட்­பட எட்­டுக்­கும் மேற்­பட்ட இடங்­களில் 5,700க்கும் மேற்­பட்ட ­ஊ­ழி­யர்­கள் பணி­ய­மர்த்­தப்­பட்­டுள்ள னர்.

ஆன்டி-ரெட்­ரோ­வை­ரல், ஹெப்­ப­டை­டிஸ் சி மற்­றும் ஆன்­கா­லஜி மருந்­து­களில் நிபு­ணத்­து­வம் பெற்ற இந்த நிறு­வ­னம், சம்­ப­வம் குறித்து வேறு எந்த விவ­ரமும் தெரி­விக்­கா­மல், விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசா­ர­ணை­யைத் தொடங்கி உள்­ள­தா­கக் கூறியுள்ளது.

விபத்­தில் படு­கா­ய­ம­டைந்த மற்ற ஊழி­யர்­க­ளுக்கும் மருத்­துவ உத­வி­களை வழங்­கு­மாறு மருத்­துவ அதி­கா­ரி­க­ளுக்கு அமர்­நாத் உத்­த­ர­விட்­டுள்­ளார்.