புதுடெல்லி: சீனாவின் கட்டுமானத் துறை செயலிழந்துள்ள நிலையில், அமெரிக்காவும் ஐரோப்பாவும் மந்தநிலையை நோக்கிச் சென்று கொண்டுள்ளன. இந்தச் சூழலில், உலகளாவிய எஃகு தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்தியா மீட்பராக உருவெடுத்துள்ளது.
வரும் 2023ல் சீனாவை முந்துவதற்கு தயாராகி வரு கிறது இந்தியா. சாலைகள், ரயில் கட்டமைப்புகள், துறை முகங்கள் உள்ளிட்டவற்றை நவீனமயமாக்க பிரதமர் மோடி முயன்று வருகிறார்.
எஃகு உற்பத்தியில் உலகின் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா, மிக விரைவில் முதலிடத்தைப் பிடித்துவிடும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்திருந்தார்.வருமாண்டில் எஃகு தேவை யில் 6.7% வளர்ச்சி பெற்று 120 மில்லியன் டன்னாக இருக்கும் என்று உலக எஃகு சங்கம் கூறியுள்ளது.

