சுற்றுலா சென்ற காதலனுக்குப் பதிலாக தேர்வெழுதிய பெண்

சுற்றுலா சென்ற காதலனுக்குப் பதிலாக தேர்வெழுதிய பெண்

2 mins read
5e88541e-73c5-4c8b-b313-dc1265285116
-

காந்தி நகர்: குஜ­ராத்­தைச் சேர்ந்த 24 வயது இளம்­பெண் ஒரு­வர், தன் காத­ல­னுக்­காக பி.காம் 3ஆம் ஆண்டு தேர்­வெ­ழுதி கையும் களவு­மாகத் தேர்வு அதி­கா­ரி­க­ளி­டம் சிக்­கிக்­கொண்­டார்.

குஜ­ராத் மாநி­லத்­தில் உள்ள வீர் நர்­மத் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நடந்த இச்­சம்­ப­வத்­தைத் தொடர்ந்து, பெண் ணின் பி.காம் பட்­டப்­ப­டிப்பை சம்­பந்­தப்­பட்ட கல்­லூரி நிர்­வா­கம் ரத்து செய்­துள்­ள­தா­கக் கூறப்­படுகிறது.

அத்­து­டன், அந்­தப் பெண் பார்த்து வந்த அர­சாங்க வேலையை இழக்­கும் சூழலும் நில­வு­வ­தாக டைம்ஸ் ஆஃப் இந்­தியா ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே, கல்­லூரி நிர்­வா­கம், சுற்­றுலா சென்ற மாண­வ­னுக்கு மூன்று ஆண்டு காலம் தேர்­வெ­ழுத தடை விதித்­துள்­ளது.

தேர்வெழுதிய பெண்­ணும் அவ­ரது காத­ல­னும் பள்­ளிப்­ப­ரு­வத்­தி­லி­ருந்தே நண்­பர்­கள் என்­ப­தும் தன் காத­ல­னுக்­காக ஆள்­மா­றாட்­டம் செய்து தேர்­வெ­ழு­தி­ய விவகாரம் அப்பெண்­ணின் பெற்­றோ­ருக்­குத் தெரி­யாது என்­றும் அதி­காரி ஒரு வர் தெரி­வித்­துள்­ளார்.

மாண­வன் மூன்­றா­மாண்டு பி.காம் தேர்­வில் தொடர்ந்து தோல்வி­யுற்று வந்­த­தால் அவ­ருக்காக ­அவ­ரது காதலி தேர்­வெ­ழுத துணிந்­த­தும் தெரி­ய­வந்­தது.

இந்நிலை­யில், அந்த மாணவி காத­ல­னுக்­காகத் தேர்வு எழு­திக் கொண்­டி­ருந்­த­போது தேர்வு அதி­கா­ரி­களின் சோதனையில் அவர் ஆள்­மா­றாட்­டம் செய்து தேர்வு எழு­து­வதைக் கண்­டு­பி­டித்­த­னர்.

காத­ல­னைத் தேர்­வில் வெற்றி பெறச் செய்ய­வேண்­டும் என்ற எண்­ணத்­தோடு, அவரது புகைப்படத்­துக்­குப் பதி­லாக தன் புகைப்­படத்தைப் பயன்­ப­டுத்தி மாண­வ­னின் தேர்வு அனு­ம­திச் சீட்­டில் உள்ள பெயர் உள்ளிட்ட விவரங் களையும் சட்­ட­வி­ரோ­த­மாக மாற்­றம் செய்­த­தும் விசா­ர­ணை­யில் அம்­ப­ல­மா­னது.

இதை­ய­டுத்து அந்த மாண­வியைத் தேர்வு அறை­யில் இருந்து வெளி யேற்­றிய தேர்வு அதிகாரிகள், அவர் மீது காவல்­து­றை­யில் புகார் அளித்­த­னர். காத­ல­னுக்­காக அதி­க­ அள­வில் சிர­மப்­பட்டு, ஆள் மாறாட்­டம் செய்து தேர்வெழு­திய மாணவி தற்­போது தன்­ வாழ்க்­கை­யையே தொலைத்து விட்டு நிற்­கும் அவல நிலை ஏற்­பட்­டுள்­ளது.