புதுடெல்லி: பிரதமர் மோடியுடன் தொலைபேசி வழி உரையாடிய உக்ரேன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, இந்தியா செய்த மனிதாபிமான உதவிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியபோது, "ரஷ்யா-உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்," என்று தெரிவித்தவர், "போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும்," என்று உறுதியளித்தார்.
அத்துடன், எந்த ஒரு பிரச்சி னைக்கும் ராணுவ நடவடிக்கை தீா்வாகாது என்றும் இருதரப்பிலும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.
இந்திய-உக்ரேன் நட்புறவு குறித்து பேசிய பிரதமர், உக்ரேனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் மீண்டும் அங்கேயே கல்வியைத் தொடர அந்நாட்டு அதிகாரிகள் மூலம் வசதிகளை செய்து தரும்படியும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த உரையாடலுக்குப் பின் அதிபர் ஜெலன்ஸ்கி தன் டுவிட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியபோது, ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை பொறுப்பேற்றுக்கொண்டதற்கு வாழ்த்துகள் தெரிவித்தேன். உக்ரேனில் அமைதி நிலவ உதவ வேண்டும் எனவும் ஐநாவில் உக்ரே னுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு நன்றி கூறி னேன்," எனவும் பதிவிட்டுள்ளார்.

