கர்நாடகாவின் 865 சிற்றூர்களை உரிமை கோரி மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தீர்மானம்

கர்நாடகாவின் 865 சிற்றூர்களை உரிமை கோரி மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தீர்மானம்

1 mins read
252ac220-e45b-4780-95e3-22e056b58f7a
-

மும்பை: கர்­நா­டக சட்­டப்­பே­ர­வை­யில், முன்னதாக எல்­லைப் பகுதி பிரச்­சி­னை­யில் மாநி­லத்­தின் நலனை காக்­கும் நோக்­கில் முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை கொண்டு வந்த தீர்­மா­னத்தை சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர்­கள் ஒரு மன­தாக நிறை­வேற்­றி­னர்.

இதற்­குப் பதி­ல­டி­யாக மகா­ராஷ்­டிரா சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று முன்­தி­னம் மகா­ராஷ்­டிரா-கர்­நா­டகா எல்லை பிரச்­சினை தொடர்­பான தீர்­மா­னத்தை மகாரஷ்டிர முதல்­வர் ஏக்­நாத் ஷிண்டே தாக்­கல் செய்­தார்.

அந்தத் தீர்­மா­னத்­தில், "கர்­நா­ட­கா­வில் உள்ள பெல்­காம், கார்வாா, நிபானி, பால்கி, பிதார் ஆகிய நக­ரங்­கள் மற்­றும் மராத்தி மொழி பேசும் மக்­கள் வாழும் 865 கர்­நா­டகாவின் சிற்றூர்களை மகா­ராஷ்­டி­ரா­வு­டன் இணைக்க உச்ச நீதி­மன்­றத்­தில் தேவை­யான அனைத்து சட்ட நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­படும்," என்று கூறப்­பட்­டுள்­ளது.

கர்­நா­ட­கா­வில் உள்ள பெல்­காம், கார்­வார், நிபானி, பால்கி, பிதார் ஆகிய நக­ரங்­கள் மற்­றும் மராத்தி மொழி பேசும் மக்­கள் உள்ள 865 கிரா­மங்­களை மகா­ராஷ்­டி­ரா­வு­டன் இணைக்க உச்ச நீதி­மன்­றத்­தில் தேவை­யான அனைத்து சட்ட நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­படும் என்று மகா­ராஷ்­டிரா சட்­டப்­பே­ர­வை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

கர்­நா­டக மாநி­லத்­தின் எல்­லை­யில் மராத்தி மொழி பேசும் மக்­கள் வசிக்­கும் பகு­தி­கள் மகா­ராஷ்­டி­ரா­வு­டன் இணைக்­கப்­பட வேண்­டும் என அம்­மா­நி­லம் உரிமை கோரி வரு­கிறது. அண்மை கால­மாக கர்­நா­டகா - மகா­ராஷ்­டிரா எல்லை விவ­கா­ரம் உச்ச நீதி­மன்­றத்­தில் நிலு­வை­யில் உள்­ளது. இந்­நி­லை­யில் மகா­ராஷ்­டிரா இந்­தத் தீர்­மா­னத்தை சட்­டப்­பே­ர­வை­யில் நிறை­வேற்­றி­யுள்­ளது.

மகா­ராஷ்­டிரா - கர்­நா­டகா இடையே எல்­லைப் பிரச்­சினை தொடர்­பாக தொடர்ந்து பதற்­றம் நீடித்து வரு­கிறது.