தாய், பாட்டியைப் போல் மனைவி அமைய ராகுல் விருப்பம்

தாய், பாட்டியைப் போல் மனைவி அமைய ராகுல் விருப்பம்

1 mins read
3b648411-5beb-404a-90e1-08c859d33a48
-

புதுடெல்லி: தனது தாய், பாட்டியின் பண்புகளைக் கொண்டுள்ள பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அண்மைய பேட்டி ஒன்றில், எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என விரும்புகிறீர்கள் என்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

"எனக்கு என் தாயாரை மிகவும் பிடிக்கும். என் பாட்டி இந்திரா காந்தியை நான் இன்னொரு அன்னை என்றே கூறுவேன். நான் திருமணம் செய்யும் பெண்ணுக்கு எனது அன்னையின், பாட்டியின் பண்புகள் சேர்ந்திருந்தால் நல்லது" என்றார் ராகுல்.

மேலும், கார்களைவிட இருசக்கர வாகனங்களை ஓட்டுவதில்தான் தமக்கு மிகுந்த விருப்பம் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தம்மிடம் சொந்தமாக கார் இல்லை என்றும் கூறியுள்ளார்.