பெங்களூரு: தன்னை திருமணம் செய்ய மறுத்த காதலியைக் கொல்ல அரவை இயந்திரத்தில் குண்டு வைத்த காதலர் கைதானார். பெங்களூரைச் சேர்ந்த அந்த இளையர் தன் காதலிக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார். அந்தப் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது, அந்தப் பெண் மறுத்து விட்டார். இதனால் ஆவேசமடைந்த அந்த இளையர், இரு தினங்களுக்கு முன்பு அரவை இயந்திரத்தில், 'டெட்டனேட்டர்' வெடிகுண்டைப் பொருத்தி, அதை கூரியர் சேவை மூலம் காதலியின் முகவரிக்கு அனுப்பினார். கூரியர் நிறுவன ஊழியர் அரவை இயந்திரத்தைக் கொடுக்க வந்தபோது, அது தனக்குரியதாக இருக்காது என்று கூறிய அந்த இளம் பெண், அதை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து, அந்த இயந்திரத்தை திருப்பி அனுப்ப 300 ரூபாய் செலுத்த வேண்டும் என்று ஊழியர் கூற, அதற்கும் அந்த இளம் பெண் சம்மதிக்கவில்லை. இதனால் அந்த ஊழியர் அரவை இயந்திரத்தை அந்தப் பெண்ணின் வீட்டுக்கு முன்பு வைத்துவிட்டுச் செல்ல முற்பட்டபோது, அது திடீரென வெடித்துச் சிதறியது. இயந்திரத்தில் டெட்டனேட்டர் பொருத்திய காதலர் கைதானார்.
காதலிக்கு அரவை இயந்திரத்தில் குண்டு
1 mins read
-

