காளைமாட்டுக் காலை நம்பி சொந்தக் காலில் நிற்கிறேன் சனிக்கிழமை ஒரு சாமானியர்

எனக்கு எப்­போ­தா­வது மனி­தர்­கள் கை கொடுத்து உதவி இருக்­கி­றார்­கள். ஆனால் காளை மாடு­களும் குதி­ரை­களும் என் வாழ்­வில் எப்­போ­தும் கால் கொடுத்து உதவி வரு­கின்­றன என்றார் லாடம் கட்­டும் கலை­ஞர் திரு சிங்­கா­ர­வேலு, 49.

தரங்­கம்­பாடி நக­ருக்கு மேற்கே சுமார் 6 கி.மீ. தொலை­வில் உள்ள இலுப்­பூர் என்ற கிரா­மத்­தைப் பூர்­வீ­க­மாகக்கொண்ட திரு வேலு­வின் தந்­தை­ திரு சஞ்சி வீர பாண்டியனும் தந்தையின் தாய்­மா­மா­வும் இதே தொழிலையே செய்­து­வந்­தார்­கள்.

திரு வேலு, கிரா­மத்­தில் 9ஆம் வகுப்பு படித்­துக்கொண்­டி­ருந்­த­போது, 1987ஆம் ஆண்டு டிசம்­பர் 24ஆம் தேதி அப்­போ­தைய தமி­ழக முதல்­வ­ரும் மக்­க­ளின் பேரா­த­ரவு பெற்ற இந்­திய தலை­வர்­களில் ஒரு­வ­ரு­மான எம்­ஜி­ஆர் மர­ண­மடைந்­து­விட்­ட­தால் பள்­ளிக்­கூ­டத்­திற்கு விடு­முறை விட்­ட­னர்.

பள்­ளிக்­கூ­டம் பிறகு எப்­போது திறந்­தது, என்ன ஆனது என்­ப­தெல்­லாம் திரு வேலுக்­குத் தெரி­யாது. அடுத்த நாள் 1987 டிசம்பர் 25 முதல் படிப்பை விட்­டு­விட்டு திரு வேலு தன் தந்­தை­யு­டன் லாடம் கட்­டும் வேலைக்­குப் போய்விட்டார்.

சொல்லிவைத்தாற்போல் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளன்று-2022 டிசம்பர் 25ஆம் தேதி யதார்த்தமாக அவரைச் சந்தித்தேன்.

“அப்­போ­தெல்­லாம் நானும் தந்தை­யும் நாள் ஒன்­றுக்குத் தலா 10 ஜோடி காளை மாடுகளுக்கு லாடம் கட்­டு­வோம். குதி­ரை­க­ளுக்­கும் கட்­டு­வோம். ஒரு ஜோடி லாடம் கட்ட அப்போது கூலி 25 ரூபாய்.

“இந்த நிலை 2000ஆம் ஆண்டு வரை நீடித்­தது. டிராக்டர், குட்டி லாரிகள் பெருகியதால் பார வண்டி மாடு­கள் படிப்­படி­யா­கக் குறைந்­து விட்­டன.

“இப்­போது நாள் ஒன்றுக்குச் சரா­ச­ரி­யாக ஒரு ஜோடி மாடு­களுக்­குத்தான் லாடம் கட்டு­கி­றேன். ரூ.1,000 முதல் 1,500 வரை கட்ட ணம் வாங்குகிறேன். நடு­நடுவே குதிரை­களுக்­கும் கட்டு­வேன்.

“தந்தை இப்­போ­தும் உடன் வரு­வார்­கள். ஆனால் அவர்­களை வேலை செய்ய அனு­ம­திப்­ப­தில்லை. என் கிரா­மத்­தில் இருந்து சுமார் 100 கி.மீ. சுற்­ற­ளவு பரப்­புக்­குள் அமைந்து உள்ள ஊர்­க­ளுக்­கும் கிரா­மங்­க­ளுக்­கும் நகர்களுக்­கும் சென்று லாடம் கட்டி வரு­கி­றேன். வாடிக்­கை­யா­ளர்­கள் தொலை­பேசி மூலம் அழைப்­பார்­கள்,” என்று திரு வேலு சொன்­னார்

“இந்­தக் காலத்­தில் காலணி இன்றி நடந்து போனால் நம் கால்­கள் பழுத்­து­வி­டும். பார வண்டி மாடு­க­ளைப் பொறுத்­த­வரை, லாடம் இல்லை என்­றால் நடக்க முடி­யாமல் மாடு படுத்­து­விடும். பாரத்­து­டன் வண்­டியை முண்டி இழுக்­கை­யில் குளம்பு வேக­மா­கத் தேய்ந்து இரத்தம் வந்­து­வி­டும்.

“லாடம் கட்­டி­னால் தார் சாலை என்­றால் 100 கி.மீ. தொலை­வுக்கு மாடு நடக்­கும். அதுவே கப்பி, கருங்­கல், ஜல்லி சாலை என்­றால் 150 கி.மீ; மண்­சாலை என்­றால் 200 கி.மீ. தொலை­வுக்கு லாடம் தேயா­மல் தாக்­குப்­ பிடிக்­கும்.

“வாடிக்கையாளர்­கள் சராசரி­யாக இரு மாதங்­க­ளுக்கு ஒரு முறை லாடம் கட்ட கூப்­பிடுவர்.­

“எங்­கள் வீட்டிலேயே சொந்த மாக கொல்லன் பட்டறை வைத்து இருக்­கிறோம். நாங்களே லாடம் அடித்து தயா­ரிக்­கிறோம். தேனி ரும்பில் ஒரு ஜோடி லாடம் தயாரிக்க ரூ.200 செலவாகிறது.

“முன்பு ஆணி­க­ளை­யும் பட்­டறையி­லேயே தயா­ரித்­தோம். இப்­போது ஆணி­களை மட்­டும் வாங்­கிக் கொள்­கி­றோம். ஒரு காளைக்கு எட்டு லாடம் தேவைப்­படும். குதிரை என்­றால் நான்கு லாடம். குதிரை லாடம் ஒரு­பு­றம் திறந்­த­படி நீள்­வட்ட வடி­வில் இருக்­கும்.

“ஒருவரை உதவிக்கு வைத்துக் கொண்டு, காளையை அதன் அடி­வயிற்றில் கயிற்­றைப் போட்டு இறுக்­கி­னால் மாடு கீழே சாயும். மாட்டை லாவ­க­மாக கையால் தாங்கி, மாட்டிற்கு அடி­ப­டா­மல் மிகக் கவ­னத்­து­டன் படுக்­க­வைக்க வேண்­டும். இல்லை என்­றால் மாட்டின் சப்பை நழுவி­வி­டும்.

“நமக்கு நகம் போல் மாட்­டிற்கு குளம்பு. குளம்­பில்­தான் லாடத்தை பொருத்த வேண்­டும். அதற்கு முன் குளம்பை உளி­யால் செதுக்கி சமப்­படுத்தி சுத்­தப்­ப­டுத்­த வேண்­டும்.

“பொது­வாக ஆணி 2 செ.மீ. ஆழத்­திற்கு இறங்கும். குளம்பு தேயா­மல் நல்­ல­படி இருந்­தால் அரை­அங்­கு­லம் ஆழத்­திற்­குக் கூட அடிக்­க­லாம். நம்­ நகத்­தில் எதைச் செய்­தா­லும் நமக்கு வலிக்­காது. அதே போல குளம்­பில் எதைச் செய்­தா­லும் மாட்­டிற்கு வலிக்­காது.

“லாடம் கட்­டாத மாட்­டிற்­கும் லாடம் கட்­டிய மாட்­டிற்­கும் அதன் நடையை வைத்தே வேறு­பாட்டை கண்­டு­பி­டித்­து­வி­ட­லாம்.

“லாடம் கட்­டிய மாடு நிமிர்ந்து, தைரி­ய­மாக, காலை பயப்­ப­டா­மல் பூமி­யில் வைத்து நடக்­கும்,” என்று திரு வேலு விளக்­கி­னார்.

திரு வேலு­வின் மனைவி காமாட்சி, 45, குடும்ப மாது. அவரின் புதல்­வர் 10ஆம் வகுப்பு படித்து வரு­கி­றார்.

“இப்­போ­தைய வேகத்­தில் பார வண்­டி­யும் காளை மாடும் குறைந்து வருமானால் இன்­னும் 15, 20 ஆண்­டு­களில் அவை சுத்­த­மாக புழக்­கத்தில் இல்­லா­மல் போய்­வி­டும். என் காலத்தை எப்­ப­டி­யா­வது நான் ஓட்டி­வி­டு­வேன். இந்­தத் தொழிலை நம்பி என் மகன் வாழ்க்­கையை அமைத்­துக்கொள்ள முடி­யாது.

“மாடுகள் தெம்பாக நடைபோட்டு பாரம் இழுக்க நான் உதவுகிறேன். அதேபோல, நானும் என் குடும்பமும் சுயசார்புடன் சொந்தக் காலில் நிமிர்ந்து நடைபோட காளைகள் கால் கொடுத்து உதவுகின்றன,” என்று திரு வேலு கூறியதை ஆமோ திப்பதைப் போல் அவர் லாடம் கட்டிய மாடு எழுந்து கால்களை நன்றாக ஊன்றி நடந்தது.

எம்ஜிஆர் மரணம் அடைந்த 1987 டிசம்பர் 24ஆம் தேதியன்று எனது பள்ளிப் படிப்பு 9ஆம் வகுப்புடன் முடிந்தது. அடுத்த நாள் முதல் நான் என் தந்தையுடன் வேலைக்குப் போய்விட்டேன். அன்று முதல் இன்று வரை காளை மாடு, குதிரைகளுக்கு லாடம் கட்டி வருகிறேன். இதைத் தொடர்வேன்.

திரு சிங்காரவேலு, 49.

மனிதனுக்கு காலணி போல் மாடு, குதிரைக்கு லாடம். தாத்தா, தந்தை, பிறகு தான் என்று காலம் காலமாக லாடம் கட்டும் தொழிலை செய்துவரும் சிங்காரவேலு, 49, காளைமாடு கால்களை நம்பி சொந்தக் காலில் நிற்பதாகக் கூறுகிறார்...

பெருந்தோட்டம் அருகே கொங்கராயநல்லூர் என்ற பேருரூக்குப் பக்கத்தில் உள்ள சகடமங்கலம் என்ற கிராமத்தில் சிஐடி என்ற மிராசுதாரின் காளை மாடுகளுக்குத் திரு சிங்காரவேலு லாடம் கட்டினார். பொதுவாக மாட்டுக்கு இரண்டு பல் முளைத்ததும் லாடம் கட்டலாம் என்றாரவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!