'வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டவேண்டும்'

'வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டவேண்டும்'

1 mins read
78802462-4688-4554-8eb6-06d97d14d653
-

மண்­டியா: விரை­வில் சட்­ட­சபை தேர்­தல் நடை­பெ­ற­வுள்ள கர்­நா­டக மாநி­லத்­தில் மீண்­டும் ஆட்­சியை கைப்­பற்­று­வ­து­டன் தமி­ழ­கம், கேர­ளா­வில் கட்­சியை வலுப்­ப­டுத்த கடந்த இரண்டு வாரங்­க­ளாக பா.ஜ.க கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­க­ளான ஜே.பி.நட்டா, அமித் ஷா பல இடங்­களில் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

அந்த வகை­யில், கர்­நா­டகா மாநில பாஜக சார்­பில் ஜன­சங்­கல்ப யாத்­திரை மாநாடு மண்­டி­யா­வில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, "கர்­நா­ட­கா­வில் காங்­கி­ரஸ் மற்­றும் மத­சார்­பற்ற ஜன­தா­தள கட்­சி­கள் வாரிசு அர­சி­யல் செய்­கின்­றன. அந்த கட்­சி­கள் ஊழல் கொள்ளை நடத்­து­கின்­றன. காங்­கி­ரஸ் ஆட்­சிக்கு வந்­தால், அது டெல்லி ஏ.டி.எம். போல செயல்­படும்.

மத­சார்­பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்­தால், அது ஒரு குடும்ப ஏ.டி.எம் ஆக இருக்­கும்.

இந்த 2 கட்­சி­களும் ஊழல்­கள் மூலம் கர்­நா­ட­கா­வின் வளர்ச்­சியை தடுத்து நிறுத்­தி­யுள்­ளன.

அத­னால் ஊழல், வாரிசு அர­சி­ய­லில் இருந்து கர்­நா­ட­காவை விடு­விக்க வேண்­டும்.

மண்­டியா, மைசூரு மண்­ட­லத்­தில் அந்த இரு கட்­சி­க­ளுக்கு நீங்­கள் வாய்ப்பு கொடுத்­தது போதும். இந்த முறை பாஜ­கவை நீங்­கள் முழு பெரும்­பான்­மை­யு­டன் வெற்றி பெற வைக்க வேண்­டும்.

அடுத்த 5 ஆண்­டு­களில் பிர­த­மர் மோடி தலை­மை­யில் கர்­நா­ட­கத்தை வளர்ச்­சி­யின் பாதைக்­குக் கொண்டு செல்­வோம்," என்­றார்.