பாஜகவுக்கு 350 கோடி ரூபாய் நன்கொடை

பாஜகவுக்கு 350 கோடி ரூபாய் நன்கொடை

1 mins read
710c0b69-892e-4bcd-9933-1efc78e12026
-

புது­டெல்லி: தேர்­தல் அறக்­கட்­ட­ளை­கள் மூலம் 2021-22 நிதி­யாண்­டில் அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை குறித்த அறிக்­கையை ஜன­நா­யக சீர்­தி­ருத்­தங்­க­ளுக்­கான சங்­கம் (ஏடி­ஆர்) வெளி­யிட்­டுள்­ளது.

அதன்­படி 89 கார்ப்­ப­ரேட், வணிக நிறு­வ­னங்­கள், 40 தனி­நபர்­கள் மொத்­த­மாக ரூ.487 கோடியை ஆறு தேர்­தல் அறக்­கட்­ட­ளை­க­ளுக்கு நன்­கொ­டை­யாக அளித்­துள்ளன.

பாஜ­கவுக்கு மட்­டும் ரூ.351.50 கோடி (72.17 விழுக்­காடு) வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு அடுத்து, கே.சந்­தி­ர­சே­க­ர­ரா­வின் பாரத் ராஷ்­டிர சமிதி (பிஆர்­எஸ்) கட்சி ரூ.40 கோடி பெற்­றுள்­ளது. அடுத்­த­டுத்த இடங்­களில், சமாஜ்­வாடி ரூ.27 கோடி, ஆம் ஆத்மி ரூ.21.12 கோடி, ஒய்.எஸ்.ஆர் காங்­கி­ரஸ் ரூ.20 கோடி­யும் பெற்­றுள்­ளன. இந்­தக் கட்­சி­கள் பெற்ற நன்­கொ­டை­யை­வி­ட­வும் குறை­வாக காங்­கி­ரஸ் ரூ.18.44 கோடியை பெற்­றுள்­ளது.