பீகார் கள்ளச்சாராய விவகாரம்; ஒருவர் கைது

பீகார் கள்ளச்சாராய விவகாரம்; ஒருவர் கைது

1 mins read
bcb56f37-8a85-427f-9c64-ec5b8da4351d
-

பாட்னா: பீகாரில் அண்மையில் கள்ளச்சாராயம் அருந்திய 80 பேர் பலியாகினர். இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில், 80 பேரின் மரணத்திற்கு காரணமான முக்கிய நபர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இதில், புதுடெல்லியில் பதுங்கியிருந்த ராம் பாபு என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி கூறிய பீகார் முதல்வர் நிதீஷ் குமார், "பெரும்பாலான மக்கள் மதுவிலக்குக்கு ஆதரவாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," எனக் கூறினார்.