வங்கி பரிவர்த்தனை மோசடி அதிகரிப்பு

வங்கி பரிவர்த்தனை மோசடி அதிகரிப்பு

1 mins read
44124528-c96d-4326-ac70-b4f045743e51
-

புதுடெல்லி: இந்தியாவில் 2022-23 நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.305 கோடி மதிப்பில் வங்கிப் பரிவர்த்தனை மோசடிகள் நடந்துள்ளதாகவும், 1,915 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தொகையின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகளில் 2021-22இல் 66.7 விழுக்காடு மோசடி நடந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 59.4 விழுக்காடாக இருந்தது.

கடன் வாங்கிய மோசடிகளைவிட, பண பரிவர்த்தனை அட்டைகள், இணைய வழி பண பரிவர்த்தனை மோசடிகளே அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.