ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கடுங்குளிரில் நடுங்குவதாக மாநில வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. அந்த மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலும் 10 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அது கூறியது.
பதேபூரில் நேற்று முன்தினம் (டிசம்பர் 31) 1 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்பநிலை குறைந்து குளிர் வாட்டியது.
அதேபோல சுரு நகரில் 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் ஹனுமான்கார்க் மற்றும் சித்தோகார்க்கில் 3.3 டிகிரி, சிகாரில் 3.5 டிகிரி, பில்வாராவில் 4 டிகிரி , ஆல்வார் மற்றும் பிலானியில் 4.8 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதரப் பகுதிகளில் 6.5 டிகிரி செல்சியஸ் முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. சில இடங்களில் கடுமையான குளிர்காற்றும் வீசி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

