சண்டிகர்: ஹரியானா மாநி லத்தில் இளநிலை திடல்தட வீரர்களுக்குப் பயிற்சியளிக் கும் பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை காவல் துறையிடம் புகார் தெரிவித் திருந்தார். பாஜக ஆட்சி நடத்தும் அந்த மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச் சராக உள்ள சந்தீப் சிங் (படம்) தம்மை அவரது இருப்பிடத் துக்கு வரவழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தமது புகாரில் அந்தப் பெண் கூறி னார். அந்தப் புகாரின் பேரில் சண்டிகர் காவல்துறையினர் நேற்று சந்தீப் சிங் மீது பாலி யல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் சந்தீப் சிங் தமது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். தம் மீதான எல்லாக் குற்றச் சாட்டுகளையும் நிராகரித்த அவர், இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றார்.
பாலியல் புகார்: அமைச்சர் விலகல்
1 mins read
-

