நீதிபதிகளில் நால்வர் ஆதரவாகவும் ஒருவர் எதிராகவும் தீர்ப்பு 'பண மதிப்பிழப்பு' செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நீதிபதிகளில் நால்வர் ஆதரவாகவும் ஒருவர் எதிராகவும் தீர்ப்பு 'பண மதிப்பிழப்பு' செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

2 mins read
2036fb7b-421a-4274-b327-e7d132c886ac
-

புதுடெல்லி: இந்­திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு மேற்­கொண்ட பண­ம­திப்­பி­ழப்பு நட­வ­டிக்கை செல்­லும் என்று இந்­திய உச்ச நீதி­மன்­றம் நேற்று தீர்ப்பு வழங்­கி­யது.

நாட்­டில் கள்­ளப் பணத்­தாள்­களை­யும் கறுப்­புப் பணத்­தை­யும் ஒழிக்­க­வும் வரி ஏய்ப்­பு, பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுக்கு நிதி கிடைப்­ப­தை தடுக்­க­வும் ஏது­வாக 2016 நவம்­பர் 8ஆம் தேதி பண மதிப்பிழப்பு குறித்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

அப்­போது புழக்­கத்­தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டு­கள் இனி செல்­லாது என்று தெரிவிக்கப்பட்டது.

அத்­து­டன், புதிய 500 ரூபாய் தாளும் 2,000 ரூபாய் தாளும் அறி­மு­கம் செய்­யப்­பட்­டன.

இத­னால், மக்­கள் வங்­கி­கள், அஞ்­ச­ல­கங்­கள் முன்­பும் தானி­யக்க வங்கி இயந்­தி­ரங்­கள் முன்­பும் வெகு­நே­ரம் காத்­தி­ருந்து, பழைய 500, 1000 ரூபாய் தாள்­களைக் கொடுத்து, புதிய பணத்­தாள்­க­ளைப் பெற்­றுச் சென்­ற­னர்.

வரி­சை­யில் நீண்­ட­நே­ரம் காத்து­ இ­ருந்­த­போது முதி­ய­வர்­கள் பலர் உயி­ரி­ழக்­க­வும் நேரிட்­டது. இத­னை­ய­டுத்து, பண­ம­திப்­பி­ழப்பு நட­வ­டிக்­கை­ குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. பல­ரும் பாதிக்­கப்­பட்­ட­தா­கக் கூறி, உச்ச நீதி­மன்­றத்­தில் 58 மனுக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன.

நீதி­ப­தி­கள் எஸ்.அப்­துல் நசீர், பி.ஆர்.கவாய். ஏ.எஸ்.போபண்ணா, பி.வி.நாக­ரத்னா, வி.ராம­சுப்­பி­ர­ம­ணி­யன் ஆகிய ஐந்து நீதி­ப­தி­க­ளைக் கொண்ட அர­சி­யல் சாசன அமர்வு அம்­மனுக்­களை விசா­ரித்­தது. அவர்­களில் நீதி­பதி நாக­ரத்­னா­வைத் தவிர்த்து, மற்ற நான்கு நீதி­ப­தி­களும் அர­சாங்­கத்­தின் முடி­விற்கு ஆத­ர­வா­கத் தீர்ப்­ப­ளித்­த­னர்.

பண­ம­திப்­பி­ழப்பு நட­வ­டிக்­கை­யின் நோக்­கம் நிறை­வே­றி­யதா இல்­லையா என்­ப­தைப் பார்க்­கத் தேவை­யில்லை என்­றும் அர­சின் பொரு­ளி­யல் கொள்கை முடி­வைத் திரும்­பப் பெறும்­படி உத்­த­ர­விட முடி­யாது என்­றும் நீதி­பதி கவாய் கூறி­னார்.

மாறாக, அர­சாங்­கத்­தின் பண­ம­திப்­பி­ழப்பு அறி­விப்பு சட்டத்­திற்கு எதி­ரா­னது என்­றும் நாடாளு­மன்­றத்­தில் சட்­டம் இயற்­றியே அதனை மேற்­கொண்டு இருக்க வேண்­டும் என்­றும் நீதி­பதி நாக­ரத்னா குறிப்­பிட்­டார்.

"அரசின் நடவடிக்கைகள் மனநிறைவு தருகிறது. எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்கப்பட மாட்டாது," எனவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.