செய்திக்கொத்து

2 mins read
4fdbd5cb-b173-4709-9ecc-5f19e8bf458c
-

3,000 கி.மீ. நடந்த ராகுல் காந்தி

புது­டெல்லி: 2022 செப்­டம்­பர் 7ஆம் தேதி ராகுல் காந்­தி­யின் ஒற்­றுமை நடைப்­ப­ய­ணம் கன்­னி­யா­கு­ம­ரி­யில் தொடங்கி­யது. பின்­னர் அந்த நடைப்­ப­ய­ணம் தமிழ்­நாடு, கேரளா, கர்­நா­டகா, ஆந்­திரா, தெலுங்­கானா, மத்­தி­யப் பிர­தே­சம், ராஜஸ்­தான், மராட்­டி­யம் மற்­றும் ஹரி­யானா ஆகிய மாநி­லங்­களில் வெற்­றி­க­ர­மாக நடை­பெற்று முடிந்­தது. ராகு­லின் இந்தப் பய­ணம் காஷ்­மீ­ரில் முடி­வ­டைய உள்­ளது. இந்திய வரலாற்­றில் எந்த ஓர் இந்­திய அர­சி­யல்­வா­தி­யும் மேற்­கொள்­ளாத மிக நீண்ட நெடும் நடைப்­ப­ய­ணம் இது என்று கூறப்­படு­கிறது. ஜன­வரி 26 ஆம் தேதி ஸ்ரீந­க­ரில் முடி­வ­டை­யும். இந்த நிலை­யில், இந்த நடைப்­ப­ய­ணம் ஒன்­பது நாள் ஓய்வுக்குப் பிறகு மீண்­டும் நேற்று உத்­த­ரப் பிரதேசத்­தில் தொடங்­கி­யது. மொத்­தம் 110 நாட்­க­ளுக்­கும் மேலாக நடை­பெற்­று­வ­ரும் இந்த நடைப்­ப­ய­ணத்­தில் இது­வரை 3,000 கி.மீ. வரை அவர் கடந்­துள்­ளார் என்­பது குறிப்பி­டத்­தக்­கது.

பொதுக்­கூட்­டங்­கள், பேர­ணி­க­ளுக்கு

ஜெகன் மோகன் ரெட்டி தடை

ஹைத­ரா­பாத்: முன்­னாள் முத­ல­மைச்­ச­ரும் தெலுங்கு தேச கட்­சித் தலை­வ­ரு­மான சந்­தி­ர­பாபு நாயுடு கடந்த டிசம்­பர் 28-ஆம் தேதி ஏற்­பாடு செய்த பொதுக்­கூட்­டத்­தில் நெரி­சல் கார­ண­மாக 8 பேர் உயி­ரி­ழந்­த­னர். அத­னை­ய­டுத்து அம்­மாநி­லத்­தின் முதல்­வர் ஜெகன் மோகன் ரெட்டி, அங்கு பொதுக் கூட்­டங்­கள் மற்­றும் பேர­ணி­கள் நடத்த தடை விதித்­துள்­ளார். பொது­மக்­க­ளின் பாது­காப்பு கருதி தேசிய நெடுஞ்­சா­லை­கள் உள்­ளிட்ட சாலை­களில் பேரணி, பொதுக்­கூட்­டம் நடத்த தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரிவித்­துள்­ளார். இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் குண்டூர் அருகே சந்­தி­ர­பாபு நாயுடு கலந்­து­கொண்ட இலவச சேலை வழங்­கும் நிகழ்ச்­சி­யில் ஏற்­பட்ட நெரி­ச­லில் சிக்கி 3 பேர் உயி­ரி­ழந்த நிகழ்ச்சி அப்­ப­கு­தி­யில் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளுக்கு

மேலும் கட்­டுப்­பாடு

புது­டெல்லி: கொவிட்-19 தொற்று ஆபத்து அதி­க­முள்ள சீனா, தென்­கொ­ரியா, ஜப்­பான், தாய்­லாந்து, ஹாங்­காங், சிங்­கப்­பூர் ஆகிய 6 நாடு­களில் இருந்து இந்­தியா வரும் பய­ணி­க­ளுக்கு ஆர்டி-பிசி­ஆர் பரி­சோ­தனை கட்­டா­ய­மாக்கப்­பட்டு உள்­ளது. இது ஜன­வரி 1 முதல் நடைமுறைக்கு வந்­துள்­ளது. இந்­நி­லை­யில் வேறு நாடு­களில் இருந்து புறப்பட்டு, இந்த 6 நாடு­கள் வழி­யாக வரும் பய­ணி­க­ளுக்­கும் தொற்­றுப் பாதிப்பு இல்லை என்­ப­தற்­கான சான்­றி­தழ் கட்­டா­ய­மாக்­கப்­பட்டு உள்­ளது. சீனா­வில் கொரோனா பரவல் உச்­சத்­தில் இருந்து வரும் நிலை­யில் மத்­திய அரசு இந்த அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளது.