பயங்­க­ர­வா­தத்­தின் மையம் பாகிஸ்­தான்

பயங்­க­ர­வா­தத்­தின் மையம் பாகிஸ்­தான்

2 mins read
54cdb88d-f06e-4cf0-86d9-8d1d484305c3
-

இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­கர்

வியன்னா: ஐக்­கிய நாடு­கள் சபை 1945ல் உரு­வாக்­கப்­பட்­டது. 75 ஆண்­டு­க­ளாக புதுப்­பிக்­கப்­ப­டா­மல் இருந்து வரு­கிறது. ஐ.நா. சபை­யைப் புதுப்­பிப்­பது இப்­போது மிக அவ­சி­யம் என்று இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­கர் (படம்) மீண்­டும் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

ஐ.நா.வில் சீா்திருத்­தம் மேற்­கொள்­வது இந்­திய வெளி­யு­ற­வுக் கொள்­கை­யின் ஒரு பகுதி. இது நாளையே நிகழ்ந்­து­வி­டாது. ஆனால், உறு­தி­யாக அது ஒரு நாளைக்கு நிக­ழும் என்று மீண்­டும் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

சைப்­ரஸ், ஆஸ்­தி­ரியா ஆகிய நாடு­க­ளுக்கு மத்­திய அமைச்சா் எஸ்.ஜெய்­சங்கா் ஆறு நாள்­கள் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். முத­லில் சைப்­ரஸ் நாட்­டுக்­குச் சென்ற அவர் தனது பய­ணத்தை டிசம்­பர் 31ஆம் முடித்­துக்­கொண்டு ஆஸ்­தி­ரி­யா­வுக்­குச் சென்­றுள்­ளார். அங்கு அவா் அந்­நாட்­டின் பிர­த­மர் கார்ல் நேஹா­மர், ஐரோப்­பிய மற்­றும் அனைத்­து­லக விவ­கார அமைச்­சர் ஆகி­யோரை சந்­தித்­துப் பேசி­னார். 27 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இந்­திய வெளி­யு­றவு அமைச்சா் ஒரு­வர் ஆஸ்­தி­ரி­யா­வுக்கு அரசு முறைப் பய­ணம் மேற்­கொண்­டது இதுவே முதல்­மு­றை­யா­கும்.

அந்­தச் சந்­திப்­பில் இரு நாட்­டுத் தலை­வர்­களும் பயங்­க­ர­வாதத்­தால் உலக அமைதி மற்­றும் பாது­காப்­புக்கு ஏற்­பட்­டுள்ள அச்­சு­றுத்­தல்­களை பற்றி பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர்.

ஆஸ்­தி­ரி­யா­வின் தலை­நகா் வியன்­னா­வில் ஞாயிற்­றுக்­கி­ழமை அங்­குள்ள இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரைச் சந்­தித்து அமைச்சா் கலந்­து­ரை­யா­டினாா்.

பின்­னர் அந்­நாட்­டுத் தொலைக்­காட்­சிக்­குப் பேட்­டி­ய­ளித்த அமைச்­சர் ஜெய்­சங்­கர், பாகிஸ்­தான்­தான் பயங்­க­ர­வா­தத்­தின் மையம் என்று கூறி­யுள்­ளார். இது கடி­ன­மான வார்த்­தை­யாக தெரி­ய­வில்­லையா என நெறி­யா­ளர் கேள்வி எழுப்­பி­னார்.

அதற்கு விளக்­கம் அளித்த ஜெய்­சங்­கர், "பயங்­க­ர­வா­தத்­தின் மையம் என்­பது நாக­ரி­க­மான விமர்­ச­னம்­தான். இதை­வி­டக் கடி­ன­மான வார்த்­தை­யைக்­கூட பயன்­ப­டுத்தி இருக்க முடி­யும்.

எங்­க­ளுக்கு என்ன நேர்ந்­து­கொண்­டி­ருக்­கிறது என்­பதை உற்­றுக்­க­வ­னி­யுங்­கள், சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு எங்­கள் நாட்­டின் நாடா­ளு­மன்­றத்­தின் மீது தாக்­கு­தல் நடத்­திய நாடு பாகிஸ்­தான். எங்­கள் மும்பை மாந­க­ருக்­குள் நுழைந்து நட்­சத்­திர விடு­தி­களில் தாக்­கு­தல் நடத்­திய, வெளி­நாட்­டுப் பய­ணி­கள் மீது தாக்­கு­தல் நடத்­திய நாடு பாகிஸ்­தான்.

அந்த நாடு நாள்­தோறும் பயங்­க­ர­வா­தி­களை இந்­தி­யா­வுக்­குள் அனுப்­பிக்­கொண்டே இருக்­கிறது. பல ஆண்­டு­க­ளாக இது நடந்து கொண்­டே­யுள்­ளது.

எனவே, அந்த நாட்டை பயங்­க­ர­வா­தத்­தின் மையம் என்று கூறு­வது பொருந்­தும்,'' என கூறி­யுள்­ளார்.

ரஷ்யா - உக்­ரேன் போர் குறித்­துப் பேசிய அமைச்சர், போரின் தொடக்­கத்­தி­லி­ருந்தே இரு நாடு­க­ளுக்­கி­டையே பேச்­சு­வாா்த்தை மற்­றும் தூத­ரக வழி­களில் தீா்வு காண வேண்­டும் என்­பதை இந்­தியா வலி­யு­றுத்தி வரு­கிறது என்­றார்.

இந்­தியா - சீனா எல்­லைப் பிரச்­சினை குறித்து பேசிய அவர், இரு நாடு­க­ளுக்­கும் இடை­யே­யான ஒப்­பந்­தத்தை மீறும் வகை­யில் சீனா எல்­லைக் கோட்டை மாற்ற முயற்சி செய்­து­விட்டு இந்­தியா மீது குறை­கூ­று­வ­தா­கக் கூறி­னார்.