தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சியாச்சின் பனிச்சிகரத்தில் முதல் பெண் ராணுவ அதிகாரி

1 mins read
5543488b-87e9-42b0-8aa7-76a82f0c08fb
-

ஸ்ரீந­கர்: உல­கின் ஆக உய­ர­மான போர்­முனை என்று குறிப்­பி­டப்­படும் சியாச்­சின் பனிச்­சி­க­ரப் பகு­தி­யில் முதன் முறை­யாக சிவா சௌஹான் என்ற பெண் அதி­காரி (படம்) பணி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளார்.

அங்கு குறிப்­பிட்ட ஒரு பகு­தி­யில் அவர் இந்­திய ராணு­வத்­துக்கு தலைமை வகிப்­பார் என்­றும் அவர் ராணுவ பொறி­யி­யல் பிரி­வைச் சேர்ந்­த­வர் என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது.

ராஜஸ்­தான் மாநி­லத்­தைச் சேர்ந்த சிவா சௌஹான் 11 வய­தி­லேயே தன் தந்­தையை இழந்­து­விட்­ட­வர். அதன் பின்­னர் ராணு­வத்­தில் பணி­யாற்ற வேண்­டும் என்று விரும்­பிய அவர், சென்­னை­யில் உள்ள ராணுவ அதி­கா­ரி­கள் பயிற்சி மையத்­தில் பயிற்சி பெற்­றார்.

சியாச்­சின் சிக­ரத்­தில் பணி­பு­ரி­யும் முதல் பெண் ராணுவ அதி­கா­ரி­யான அவ­ருக்கு மத்­திய தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் வாழ்த்து தெரி­வித்­துள்­ளார்.

சியாச்­சின் பனிச்­சி­க­ர­மா­னது சுமார் 20 ஆயி­ரம் அடி உய­ரம் உடை­யது.