சோனியா உடல் நலம் பாதிப்பு

1 mins read
ebb8d512-fa62-47f1-b0a0-bf2b0a298c1d
-

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சுவாசப் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் மூச்சுவிட சிரமப்பட்டதால் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து நடைப்பயணத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் உடனடியாக டெல்லி திரும்பினர்.