புதுடெல்லி: விபத்தில் சிக்கி இறந்த இளம்பெண் அஞ்சலியின் உடல் பல கிலோ மீட்டர் தூரம் காரில் இழுத்துச் செல்லப்பட்டது குறித்து, அப்பெண்ணின் தோழி நிதி அளித்த பேட்டி பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
அஞ்சலி மது அருந்தி இருந்ததால், வாகனத்தை ஓட்ட வேண்டாம் என்றும் தாம் கூறியதாக நிதி தெரிவித்துள்ளார்.
"அஞ்சலி காரில் இழுத்துச் செல்லப்படுவதைப் பார்த்தும் என்னால் அதைத் தடுக்க முடியவில்லை. அதனால் அச்சத்தில் வீடு திரும்பிய பின் அழுது கொண்டே இருந்தேன்," என்று நிதி கூறியுள்ளார்.
ஆனால் தன் தோழியைக் காப்பாற்ற முயற்சி செய்யாத பெண்ணின் வாக்குமூலத்தை எவ்வாறு நம்ப முடியும் என தேசிய மகளிர் ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

