ஓராண்டுக்குள் 125,000 இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா

ஓராண்டுக்குள் 125,000 இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா

1 mins read
7d056692-4c0a-4e11-87d1-f30c7a40abd8
-

வாஷிங்­டன்: கடந்த ஓராண்டு கால­கட்­டத்­தில் ஒரு லட்­சத்து 25,000 இந்­திய மாண­வர்­க­ளுக்கு விசா வழங்கி அமெ­ரிக்கா சாதனை படைத்­துள்­ள­தாக அமெ ரிக்க வெளி­யு­றவு அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் நெட் பிரைஸ் தெரி­வித்­துள்­ளார்.

விசா பெறு­வ­தற்­கான காத்­தி­ருப்பு நேரத்­தைக் குறைப்­ப­தற்­காக எச், எல் பணி­யா­ளர் விசா விண்­ணப்பதாரர்­க­ளுக்கு 100,000 இடங்­களை அமெ­ரிக்கா திறந்­துள்­ள­தா­க­வும் அவர் மேலும் கூறி­னார்.

பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பில், இந்­திய சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்கு விசாக்­களை அனு­ம­திப்­ப­தில் கால­தா­ம­தம் ஏற்­ப­டு­வது ஏன் என நெட் பிரைசிடம் கேட்கப்­பட்­டது.

இதற்­குப் பதி­ல­ளித்த அவர், "இந்­தி­யா­வில் உள்ள அமெ­ரிக்­கத் தூத­ர­க­மும் தூத­ரக அதி­கா­ரி­களும் 2022ஆம் நிதி­யாண்­டில் மட்­டும் இது­வரை இல்­லாத அள­வில் மாண­வர்­க­ளுக்கு விசா வழங்கி சாதனை படைத்­துள்­ள­னர்.

"அதன்­படி, ஏறக்­கு­றைய 1.25 இந்­திய மாண­வர்­க­ளுக்கு விசா அனு­மதி வழங்கி இருக்­கி­றோம்.

"ஒரு சில விண்­ணப்­ப­தா­ரர்­களுக்கு நீட்­டிக்­கப்­பட்ட விசாக்­களைப் பெறு­வ­தில் கால­தா­ம­தம் ஏற்­படு வதை ஒப்புக்­கொள்­கி­றோம். விசாக்­க­ளைப் பெறு­வோ­ருக்­கான நேர்­கா­ண­லுக்­கான காத்­தி­ருப்பு நேரம் குறை­வ­தற்­காக நாங்­கள் தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வரு­கி­றோம்," என்றார்.

"இந்த முக்­கி­ய­மான பணி­களைச் செய்ய நாங்­கள் அமெ­ரிக்க வெளி­நாட்டு, சேவை பணி­யா­ளர்­களைப் பணி­ய­மர்த்­து­வதை இரட்­டிப்­பாக்­கி­யுள்­ளோம். விசா செய­லாக்­கம் திட்­ட­மி­டப்­பட்­டதை விட வேக­மாக மீண்டு வரு­கிறது," என்று நெட் பிரைஸ் கூறி­னார்.