தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

122 ஆண்டுகளில் இல்லாத சில்லிடும் குளிர், பனிமூட்டம்

2 mins read
8e0d3d4b-1fb6-48c8-a01d-02d508d1da7f
-

புது­டெல்லி: வட­இந்­தி­யா­வில் கடந்த ஒரு வார­மாக வெப்ப நிலை குறைந்து, உடலைச் சில் லிட வைக்­கும் குளிர்­காற்­று வீசி வருகிறது. கடும் பனி மூட்­டமும் நிலவுவதால் மக்­கள் வீடு­க­ளுக்­குள் முடங்­கிப்போயுள்ள­னர்.

தலைநகர் டெல்லியில் கடந்த 1901ல் வர­லாறு காணாத அளவில் ­குளிர் நில­வி­யது. ஏறக்­கு­றைய 122 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்டும் இப்போது தாங்கமுடி­யாத குளிர் நிலவுகிறது.

இதனால், அதி­காலையில் வீட்டை விட்டு வெளி­யில் வரமுடி­யா­த­ மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

வாட்டும் குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே மக்­கள் தீமூட்டி அதனைச் சுற்றி அமர்ந்து குளிர் காய்ந்தும் வருகின்றனர்.

அரு­ணாச்­ச­லப் பிர­தே­சத்­தில் 11 டிகிரி செல்­சி­யசாகவும் டெல்­லி­யில் நேற்று காலை 3 டிகிரி செல்­சி­ய­சாகவும் தட்பவெப்­ப­நிலை பதிவானதை அடுத்து, குளிரில் உறைந்து விடு­வோமோ என மக்களிடம் அச்சம் நிலவியது.

டெல்லி விமான நிலை­யத்­துக்கு வரும் அனைத்து பய­ணி­களுக்­கும் பனி­மூட்­டம் குறித்த எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக விமான நிலைய அதி­கா­ரி­கள் தெரி­வித்­தனர்.

அடர்த்­தி­யான பனி­மூட்­டத்­தால் சாலை­கள் தெளி­வாக தெரி­யாததால் வடக்கு ரயில்வே மண்டலத்­தில் 12 ரயில்­கள் கால­தா­ம­த­மாக இயக்­கப்­பட்­டன.

பஞ்­சாப், அரி­யானா, சண்­டி­கர், உ.பி., பீகார் உள்ளிட்ட மாநி­லங்­க­ளி­லும் கடுங்குளிர் நில­வு­கிறது. இம்மாநி­லங்­களில் அடுத்த இரண்டு நாள்­க­ளுக்கு குளிர் காற்று வீசும் என ஆரஞ்சு எச்சரிக்கையும் டெல்­லி­யில் கடுங்குளிர் நிலவுமென சிவப்பு எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்­துள்­ளது.

"அடுத்த மூன்று அல்­லது நான்கு நாள்க­ளுக்கு வடக்கு-மேற்கு இந்­தி­யா­வில் மிக அடர்த்­தி­யான மூடு­ப­னி­யும் கடும் குளி­ரும் தொட­ரக் கூடும், அதன்­பின் தீவி­ரம் குறை­யும்," என வானிலை மையம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

"எனது கடையை காலை 5 மணிக்கெல்­லாம் திறந்துவிடு­வேன். என் வாழ்வாதாரத்துக்கு இந்­தக் குளி­ரைக் கடந்­துதான் ஆகவேண்டும். அத­னால்­தான் தீமூட்டி குளிர்காய்­கி­றேன்," என இ-ரிக்‌ஷா பழு­து­பார்க்­கும் கடையை நடத்­தும் ஆட­வர் ஒரு­வர் ஏஎன்ஐ ஊட­கத்­தி­டம் கூறிய­தாக 'டைம்ஸ் நவ்' ஊட­கச் செய்தி தெரி­வித்­துள்­ளது.

தங்கள் வாழ்வாதாரமாக இருக்கும் எருமைகள் குளிரால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், அவற்றை போர்வை, புடவையால் போர்த்திப் பராமரிக்கும் டெல்லி ஆடவர். படம்: ராய்ட்டர்ஸ்