போபால்: குஜராத் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் பைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற குஜராத் சட்டப் பேர வைத் தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், இந்த தோல் விக்குப் பொறுப்பேற்று குஜராத் மாநிலக் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரகு சர்மா தனது பதவியை விட்டு விலகினார்.
இதுகுறித்து கட்சியின் புதிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் விவாதித்த தாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மக்களவை உறுப்பினர் சப்தகிரி சந்தார், பீகார் சட்டப்பேரவை உறுப்பினர் சக்கீல் அகமது கான் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவினர் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து இரு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

