புனே: நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக மத்தியிலும் மகாராஷ்டிரத்திலும் உள்ள பாஜக அரசுகளை விமர்சித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திருமண வயது இளைஞர்களுக்கு மணமகள் கிடைக்காததால் சமூகப் பிரச்சினைகளை உருவாக்கி வருவதாகக் கூறிஉள்ளார்.
புனேயில் ஒரு நிகழ்வில் பேசிய அவர், "இன்றைக்கு கிராமங்களில் பொது இடங்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 15 முதல் 20 இளைஞர்கள் வேலையில்லாமல் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் சிலர், `பட்டப் படிப்பு', `முதுகலைப்பட்டம்' படித்திருப்பதாகச் சொல்கின்றனர். திருமணமாக வில்லை என்கின்றனர். ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேட்டால், "வேலை இல்லை என்பதால் பெண் கொடுக்க மறுக்கின்றனர் என்கின்றனர். இந்தப் புகார்கள் கிராமங்களில் அதிகமாகக் காணப்படுகிறது," என்று கூறினார்.

