உலகின் மிக நீண்டதூர சொகுசுக் கப்பல் சுற்றுலா

1 mins read
5faf6f71-a844-4772-9e85-d5765b68ff87
-

உலகின் மிக நீண்ட தூர 'கங்கா விலாஸ்' சொகுசுக் கப்பல் சுற்றுலாவை பிரதமர் மோடி வரும் 13ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இருந்து பங்ளாதேஷ் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் வரை செல்லும் இந்த சொகுசுக் கப்பல் பயணம் மூலம் 50க்கும் மேற்பட்ட இடங்களைச் சுற்றுப் பயணிகள் கண்டு ரசிக்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு நதிகளான கங்கை, பிரம்மபுத்ராவில் 50 நாள்களுக்கு பயணம் தொடர உள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்த ஆடம்பர சொகுசுக் கப்பலில் 18 அறைகள், எல்இடி தொலைக்காட்சி, நவீன படுக்கை வசதி, இசை, கலாசார நிகழ்ச்சிகள், உடற்பயிற்சிக் கூடம், ஸ்பா, திறந்தவெளி தளம், உணவகம் என ஏராளமான ஆடம்பர வசதிகள் உள்ளன. பயணம் மேற்கொள்ளும் காலத்தைப் பொறுத்து ஒரு பயணிக்கான கட்டணம் 12,800 அமெரிக்க டாலரில் இருந்து தொடங்குவதாகவும் கூறப்படுகிறது. படம்: இந்திய ஊடகம்