தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடுவானில் மாரடைப்பு: பயணியைக் காப்பாற்றிய மருத்துவர்

2 mins read
bd28cc98-b055-4614-ad1c-5c15a9f92164
-

மும்பை: நடு­வா­னில் இரு­முறை மார­டைப்பு ஏற்­பட்டு உயி­ருக்­குப் போரா­டிய பய­ணி­யைக் காப்­பாற்­றிய இந்­திய வம்­சா­வளி மருத்­து­வருக்­குப் பாராட்­டு­கள் குவி­கின்­றன.

இங்­கி­லாந்­தின் பர்­மிங்­ஹாம் பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்றி வரும் விஸ்­வ­ராஜ் வெமலா (படம்) என்ற மருத்து­வர் ஏர் இந்­தியா விமா­னம் மூலம் பெங்­க­ளூ­ருக்­குப் பய­ணம் மேற்­கொண்­டார்.

இந்­நி­லை­யில் அதே விமா­னத்­தில் பய­ணம் செய்து கொண்­டி­ருந்த 43 வயது பய­ணிக்கு திடீர் மார­டைப்பு ஏற்­பட்­டது.

இது­கு­றித்து விமா­னப் பணி­யா­ளர்­கள் தகவல் தெரி­வித்­ததை அடுத்து, அந்­தப் பய­ணிக்கு சிகிச்சை அளித்­தார் மருத்துவர் விஸ்­வ­ராஜ்.

அந்தப் பயணி மூச்­சு­வி­டா­மல் மயங்­கிய நிலை­யில் இருக்க, விஸ்­வ­ராஜ் அளித்த முத­லு­தவி சிகிச்­சை­யின் பல­னாக ஒரு மணி நேரத்­தில் இயல்பு நிலைக்­குத் திரும்­பி­னார். எனி­னும் அடுத்த சில நிமி­டங்­களில் அவ­ருக்கு மீண்­டும் மார­டைப்பு ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து விமான ஊழி­யர்­க­ளி­ட­மும் மற்ற பய­ணி­க­ளிடமும் இருந்த மருத்­து­வக் கரு­வி­க­ளைப் பெற்று சிகிச்சை அளித்­துள்­ளார் விஸ்­வ­ராஜ். இம்­முறை அந்­தப் பயணி மீண்­டும் கண்­வி­ழிக்க கூடு­தல் நேர­மா­னது.

இவ்­வாறு சுமார் ஐந்து மணி நேரம் அந்­தப் பய­ணியை உயி­ரு­டன் வைத்­தி­ருக்க விஸ்­வ­ராஜ் போரா­டி­னார்.

பின்­னர் அந்த விமா­னம் மும்­பை­யில் அவ­ச­ர­மாக தரை­யி­றக்­கப்­பட்­டது. பிறகு அந்­தப் பயணி அங்­குள்ள மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

முன்­ன­தாக, அவ­ச­ரம் கருதி பாகிஸ்­தா­னில் விமா­னத்தை தரை­யி­றக்க விமானி அனு­மதி கோரி­னார். ஆனால் அவ­ரது கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

விமா­னத்­தில் இருந்து இறங்கு­வ­தற்கு முன்பு, மருத்­து­வர் விஸ்­வ­ரா­ஜுக்கு அந்தப் பயணி கண்­ணீர்­மல்க நன்றி தெரி­வித்­தார்.

"கண்­களில் கண்­ணீ­ரு­டன் அந்­தப் பயணி எனக்கு நன்றி கூறி­னார். இந்­தச் சம்­ப­வம் என்­றும் என் நினை­வில் பதிந்­தி­ருக்­கும்," என்­றார் மருத்­து­வர் விஸ்­வ­ராஜ்.