புதுடெல்லி: புதிய நாடாளு மன்றக் கட்டடம் இம்மாத இறுதிக்குள் முழுமையான பயன் பாட்டுக்குத் தயாராகி விடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்த தாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நாடாளு மன்ற கட்டடம், நூறு ஆண்டுகள் பழமையானது என்பதால் புதிய கட்டடம் கட்டுவது என மத்திய அரசு முடிவு செய்தது.
இதையடுத்து சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் அதற்கான பணிகள் தொடங்கின. புதிய கட்டடத்தில் பொதுவான மத்திய செயலகம், பிரதம ருக்கான புதிய இல்லம், அலுவலகம், துணை அதிபர் மாளிகை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இக்கட்டட திறப்பு விழா மிக விரைவில் நடைபெறும் எனத் தெரிகிறது.

