ஓராண்டில் காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 1,700 பேர் கைது

ஓராண்டில் காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 1,700 பேர் கைது

1 mins read
ea7290ff-4b82-403b-b6c0-36f354ff0b06
படம்: பிக்ஸாபே -

ஸ்ரீந­கர்: கடந்த ஓராண்­டில் மட்­டும் காஷ்­மீ­ரில் போதைப்­பொ­ருள் கடத்­த­லில் ஈடு­பட்ட 1,700 பேர் கைதாகி உள்ள­னர்.

ஜம்மு காஷ்­மீ­ரில் பாது­காப்­புப் படை­யி­னர் மேற்­கொண்ட அதி­ரடி நட­வ­டிக்­கை­க­ளின்­போது ரொக்­கப் பணம், ஆயு­தங்­கள், வெடி­பொ­ருள்­கள் பெரு­ம­ள­வில் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக காஷ்­மீர் கூடு­தல் காவல்­துறை இயக்­கு­நர் விஜய்­கு­மார் தெரி­வித்­தார். இது­தொ­டர்­பாக 1,021 வழக்கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

"ஹெரா­யின், பிர­வுன் சுகர், டன் பாங் உள்­ளிட்ட போதைப் பொருள்­க­ளைப் பறி­மு­தல் செய்­துள்­ளோம். மேலும் சுமார் 51 ஹெக்­டேர் நிலப்­ப­ரப்­பில் பர­வி­யி­ருந்த போதைப் பயிர்­களை அழித்­துள்­ளோம்.போதைப்­பொ­ருள் அச்­சு­றுத்­த­லுக்கு எதி­ரான போர் மேலும் தீவி­ர­ம­டை­யும்," என்­றார் விஜய்­கு­மார்.