புதையும் நகரம்: நியாயமான இழப்பீடு வழங்கக்கோரி பொதுமக்கள் கண்ணீர்; போராட்டம்

புதையும் நகரம்: நியாயமான இழப்பீடு வழங்கக்கோரி பொதுமக்கள் கண்ணீர்; போராட்டம்

2 mins read
e0a1beb5-5170-4a3f-871f-63f7c8632a5a
-

டேராடூன்: ஜோஷி­மத் நக­ரில் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­களை இயற்­கைப் பேரி­ட­ராக அறி­வித்து உரிய நட­வடிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என அப்­ப­குதி மக்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

மேலும் தங்­க­ளுக்கு நியா­ய­மான முறை­யில் இழப்­பீடு வழங்கப்­பட வேண்­டும் என்­றும் அதற்­கான அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை வெளி­யி­டா­மல் தங்­கள் வீடு­களை அரசு இடிக்­கக்­கூ­டாது என்­றும் அம்­மக்கள் கூறி­யுள்­ள­னர்.

பல ஆண்­டு­க­ளாக வசித்த வீடு­கள் இடிக்­கப்­ப­டு­வ­தைக் கண்டு பலர் கண்­ணீர் விட்­டுக் கதறி அழு­த­னர்.

உத்த­ர­காண்ட் மாநி­லத்­தில் உள்ள புனித நக­ர­மான ஜோஷி­மத்­தில் கடந்த சில நாள்­க­ளாக சாலை­கள், கட்­ட­டங்­களில் திடீரென விரி­சல் ஏற்­பட்டு வருகிறது. இத­னால் பல வீடு­கள் சேத­ம­டைந்­துள்­ளன.

அங்கு ஆய்வு மேற்­கொண்ட நிபு­ணர்­கள், பாதிக்­கப்­பட்ட கட்­ட­டங்­களை உட­ன­டி­யாக இடித்து அப்­பு­றப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் இல்­லை­யெ­னில் பெரும் பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டும் என்­றும் எச்­ச­ரித்­துள்­ள­னர். ஆண்­டு­தோ­றும் வெளி­மாநிலங்­கள், வெளி நாடு­களில் இருந்து பத்து கோடி பேர் உத்­த­ர­காண்ட் மாநி­லத்­துக்கு வருகை புரி­கின்­ற­னர். இத­னால் அண்மைய சில ஆண்­டு­க­ளாக அங்கு ஏரா­ள­மான கட்­டு­மா­னப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இதனால்தான் விரி­சல்­கள் ஏற்­பட்டுள்­ள­தாக ஒரு தரப்­பி­னர் கூறினர்.

இந்­நி­லை­யில், பாதிப்பு அதி­க­முள்ள பகு­தி­களில் அபாய நிலை­யில் உள்ள கட்­ட­டங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு வரு­கின்­றன. இத­னால் இடிக்­கப்­பட வேண்­டிய கட்­ட­டங்­க­ளின் எண்­ணிக்கை 738 ஆக அதி­க­ரித்­துள்­ளது. எனி­னும் கட்­ட­டங்­களை இடிப்­ப­தற்கு பொது­மக்­கள் மத்­தி­யில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது. உரிய இழப்பீட்டை அறி­விக்கவில்லை என பலர் கண்ணீர்மல்க தெரி வித்தனர். ஒரு தரப்பினர் போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.