உணவுக் கழக ஊழல்: 50 இடங்களில் சோதனை

உணவுக் கழக ஊழல்: 50 இடங்களில் சோதனை

2 mins read
7f644181-9bb1-48eb-b0c9-fffdcdfbc943
படம்: எஎஃப்பி -

புது­டெல்லி: இந்­திய உண­வுக் கழ­கத்­தில் பல்­வேறு முறை­கே­டு­கள் நடந்­துள்­ள­தாக வெளி­யான தொடர் புகார்­களை அடுத்து சிபிஐ அதி­கா­ரி­கள் அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

அதை­ய­டுத்து, உணவுக் கழக துணை பொது மேலா­ளர் கைது செய்­யப்­பட்­டார்.

மூன்று மாநி­லங்­களில் அந்­தக் கழ­கத்­து­டன் தொடர்புள்ள ஐம்பதுக்­கும் மேற்­பட்ட இடங்களில் நேற்று முன்­தி­னம் சோதனை நடந்­தது.

நாடு முழு­வ­தும் உள்ள விவசாயி­க­ளி­டம் இருந்து பொது விநி­யோ­கத் திட்­டத்­துக்­கான உணவு தானி­யங்­களைக் கொள்­முதல் செய்­கிறது உண­வுக்கழகம்.

இந்­நி­லை­யில், உணவுக் கழ­கத்­தில் பல்­வேறு வகை­யில் ஊழல் நடப்­ப­தாக புகார்­கள் எழுந்­தன.

உணவு தானிய கொள்­மு­தல் தொடங்கி அவற்­றைச் சேக­ரித்து வைப்­பது தொடர்­பி­லும் விநி­யோகம் தொடர்­பா­க­வும் கோடிக்­கணக்­கில் லஞ்­சப் பணம் கைமாறு­வதா­கப் புகார்­கள் கிளம்­பின.

இந்­தக் கழ­கத்­தின் உயர் அதி­கா­ரி­கள், தானிய வர்த்­த­கர்­கள், அரிசி ஆலை உரி­மை­யா­ளர்­கள் ரக­சி­ய­மா­கக் கூட்­டணி அமைத்து செயல்­பட்டு வந்­துள்­ள­னர்.

உண­வுக் கழக அதி­காரிகள் பல­ருக்கு லஞ்­சப் பணம் கைமாறி­ய­தாக கூறப்­ப­டு­வது குறித்து சிபிஐ தரப்­பில் ரக­சிய விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டது.

புகார்­க­ளுக்கு முகாந்­திரம் இருப்­பது தெரி­யவந்­ததை அடுத்து, கடந்த ஆறு மாதங்­களாக சிபிஐ அதி­கா­ரி­கள் சிலர் உண­வுக் கழக அதி­கா­ரி­களை உளவு பார்த்து வந்­த­னர்.

இந்­நி­லை­யில் உணவுக் கழக துணைப் பொது மேலா­ளர் ஒருவர் ஐம்­ப­தா­யி­ரம் ரூபாய் லஞ்­சம் பெற்­ற­போது கையும் கள­வு­மா­கப் பிடி­பட்­டார்.

இதை­ய­டுத்து பஞ்­சாப், ஹரி­யானா, டெல்லி உள்­ளிட்ட மாநிலங்­களில் சிபிஐ அதி­காரிகள் ஒரே சம­யத்­தில் சோதனை மேற்­கொண்­ட­னர்.

ஐம்­ப­துக்­கும் மேற்பட்ட இடங்­களில் நடந்த சோத­னை­யின்­போது பல்­வேறு முக்­கிய ஆவ­ணங்­கள், ரொக்­கப் பணம் ஆகி­யவை கைப்­பற்­றப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மேலும், உண­வுக் கழ­கத்­தைச் சேர்ந்த தொழில்­நுட்ப உத­வி­யாளர்­கள், செயல் இயக்­கு­நர்­கள் உள்­ளிட்ட பல அதி­கா­ரி­க­ளி­டம் தொடர் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது.