புதுடெல்லி: வர்த்தகத்தில் நேர்மையற்ற வழியில் செயல்பட்டதாக எழுந்துள்ள புகாரின் பேரில் விதிக்கப் பட்டுள்ள ரூ.1,337.76 கோடி அபராதத்தை எதிர்த்து கூகல் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி, வரும் 16ஆம் தேதி உச்ச நீதி மன்றம் விசாரிக்க உள்ளது.
முன்னதாக, இந்திய தொழில் போட்டி ஆணையத்தால் கூகல் நிறுவனத்துக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

