பாதுகாப்பை மீறி மோடிக்கு மாலை போட ஓடி வந்த சிறுவன்

பாதுகாப்பை மீறி மோடிக்கு மாலை போட ஓடி வந்த சிறுவன்

1 mins read
c9778269-02b1-47cf-823c-2412bf3eee0f
-

பெங்களூர்: கர்­நா­ட­கா­வில் திறந்தவெளிக் காரில் நின்றபடி வந்த பிர­த­மர் மோடியை நோக்கி சிறு­வன் ஒரு­வன் மாலை போட பாய்ந்­த­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

கர்­நா­டகா மாநி­லம், ஹூப்ளி நக­ரில் ஐந்து நாள்களுக்கு நடை­பெ­றும் இளை­ஞர் திருவிழா வைத் ­தொ­டங்கிவைப்­ப­தற்­காக பிர­த­மர் மோடி திறந்த காரில் நின்றபடி பய­ணம் செய்­தார். அவ­ருக்கு சாலை­யின் இரு­பு­றத்­தி­லும் திரண்­டி­ருந்த மக்­கள் உற்­சாக வர­வேற்பு அளித்­த­னர்.

அப்போது, மோடிக்கு வழங்கப் பட்ட பாது­காப்­பை­யும் மீறி பேரணி­ யின் நடு­வில் திடீ­ரென சிறு­வன் ஒரு­வன் மாலை­யு­டன் பிர­த­மர் மோடியை நோக்­கி ஓடி வந்தான். சிறு­வ­னைப் பாது­காப்பு அதி­கா­ரி­கள் தடுத்­து நிறுத்தினர்.

பின்னர், சிறு­வ­னி­டம் இருந்த மாலையைப் பிர­த­மர் மோடி வாங்­கிக்­கொண்­டார்.