நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபாவை தரிசனம் செய்வதற்காக 50 பயணிகளுடன் சென்று கொண் டிருந்த பேருந்து ஒன்று, சரக்கு வாகனத்தின் மீது மோதியதில் ஏழு பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அைடந்தனர்.
காயமடைந்தவர்கள் நாசிக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தப் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
அத்துடன், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

