கட்டாக்: ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தின் பதம்மா என்னும் சிற்றூருக்கு அருகே மகாநதியோரம் சிங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இது ஒடிசாவின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாகும். மகர சங்கராந்தியை முன்னிட்டு அந்தக் கோயிலில் நேற்று முன்தினம் மகர மேளா தொடங்கியது. இதில் சுமார் 200 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது அங்குள்ள பதம்பா - கோபிநாத்பூரை இணைக்கும் பாலத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 45 வயதுப் பெண் உயிரிழந்தார். குழந்தைகள், பெண்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஒடிசா: கோயில் நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
1 mins read
-

