ஜோத்பூர்: ராஜஸ்தானின் ரோஹெட்டில் கடந்த 4ஆம் தேதி நடந்த சாரணர், சாரணியர் நிகழ்ச்சியில் அதிபர் திரௌபதி முர்மு கலந்துகொண்டார். அப்போது, பொதுசுகாதார பொறியியல் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றும் அம்பா சியோல் என்ற பெண், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அதிபர் முர்முவின் கால்களைத் தொட்டு ஆசிபெற முயன்றுள்ளார். அந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அம்பா சியோல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் பொதுசுகாதார பொறியியல் துறை தெரிவித்து உள்ளது.
அதிபரிடம் ஆசிபெற முயன்ற பொறியாளர் இடைநீக்கம்
1 mins read
பொறியாளராகப் பணியாற்றும் அம்பா சியோல் என்ற பெண், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அதிபர் முர்முவின் கால்களைத் தொட்டு ஆசிபெற முயன்றுள்ளார். படம்: த ஃபைனேன்ஷல் எக்ஸ்பிரஸ் -

