திருவனந்தபுரம்: மகரஜோதி தரிசனத்தைக் காண சபரிமலைப் பகுதியில் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இதற்கிடையே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக சனிக்கிழமை முதல் எருமேலியில் இருந்து பக்தர்கள் வாகனங்களில் சபரிமலைக்குச் செல்ல காவல் துறை தடை விதித்தது. இதனால் பாதித் தூரம் வந்த தமிழக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பக்தர்கள் அங்கு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்து நெரிசல் குறைந்த பிறகு அனைவரையும் அனுப்பி வைப்பதாக அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து பக்தர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

