செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
cf03882b-6d8f-4d0e-a604-2dbefc7f105a
-

பெங்களூரு 2வது முனையத்தில் விமானச் சேவை தொடங்கியது

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ரூ.5,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 2வது முனையத்திற்குப் பசுமை முனையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சங்கராந்தி விழாவை முன்னிட்டு பெங்களூரு விமான நிலையத்தின் 2வது முனையத்தில் இருந்து ஜனவரி 15ஆம் தேதி விமான சேவை தொடங்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை 2வது முனையத்தில் இருந்து முதல் விமான சேவை தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

செகந்திராபாத் - விசாகப்பட்டினம் 8வது விரைவு ரயில் சேவை

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் செகந்திராபாத், ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு இடையிலான 8 ஆவது விரைவு ரயில் சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின்கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான 'வந்தே பாரத்' என்றழைக்கப்படும் ரயில் ஏற்கெனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. சென்னையில் தயாரிக்கப்பட்ட அந்த ரயிலில் 1,128 போ் பயணம் செய்ய முடியும்.