டெல்லியில் பாஜகவின் மாபெரும் பேரணி

டெல்லியில் பாஜகவின் மாபெரும் பேரணி

1 mins read
92e671da-68b4-4e33-a9c5-f9d0d563bee1
புது­டெல்லி: ஆளும் கட்­சி­யான பார­திய ஜனதா கட்­சி­யின் இரண்டு­நாள் தேசிய செயற்­குழுக் கூட்­டம் டெல்­லி­யில் நேற்று தொடங்­கி­யது. படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: ஆளும் கட்­சி­யான பார­திய ஜனதா கட்­சி­யின் இரண்டு­நாள் தேசிய செயற்­குழுக் கூட்­டம் டெல்­லி­யில் நேற்று தொடங்­கி­யது. முன்­ன­தாக, பிர­த­மர் நரேந்­திர மோடி பங்­கேற்­கும் பேர­ணிக்கு அக்­கட்சி ஏற்­பாடு செய்­துள்­ளது.

இதில் பாஜக தேசிய தலை­வர் ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்­ளிட்ட மத்­திய அமைச்­சர்­கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்­வர்­கள், கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­கள் கலந்­து­கொண்டனர்.

பாஜ­க­வின் தேசிய செயற்­குழுக் கூட்­டம், இன்று வரை டெல்­லி­யில் என்­டி­எம்சி மாநாட்டு மண்டபத்தில் நடை­பெ­று­கிறது.

குஜ­ராத் சட்­டமன்றத் தேர்­த­லில் பாஜக பெற்ற மாபெ­ரும் வெற்­றிக்குப் பிறகு முதல் முறை­யாக அக்­கட்சி மிகப்­பெ­ரிய கூட்­டம் ஒன்­றிற்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

முன்­ன­தாக பிர­த­மர் மோடி அவ­ரது சொந்த மாநி­ல­மான குஜ­ராத்­தில் 50 கிலோ மீட்­டர் தூரத்­திற்கு நடந்த மிகப்­பெ­ரிய பேர­ணி­யில் கலந்துகொண்­டார்.

டெல்­லி­யில் நேற்று நடை­பெற்ற பேரணி கார­ண­மாக டெல்­லி­யின் சில பகு­தி­களில் போக்­கு­வ­ரத்து நெரி­சலை குறைப்­ப­தற்­கா­க­ சிறப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் டெல்லி காவல்துறை தெரி­வித்­தது.

இந்த மாநாடு குறித்து பாஜ கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர், வினோத் தாவ்டே கூறு­கை­யில், "நல்­லாட்சி, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய மற்­றும் அதி­கா­ர­ம­ளித்த இந்­தியா" உள்­ளிட்ட ஆறு வெவ்­வேறு கருப்­பொருள்­களில் ஒரு மாபெரும் கண்­காட்சி இரண்டு நாள் செயற்­குழுக் கூட்­டத்­தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது," என்­றார்.