பட்னாவிஸ்: பணம் கேட்டு மிரட்டியதால் பெரிய தொழிற்சாலை கர்நாடகா சென்றது

பட்னாவிஸ்: பணம் கேட்டு மிரட்டியதால் பெரிய தொழிற்சாலை கர்நாடகா சென்றது

1 mins read
650a168d-8292-47fa-bf98-94997ac128de
முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் பணம் கேட்டு மிரட்­டி­ய­வர்­கள் யாராக இருந்­தா­லும் அவர்­கள்­மீது கடு­மை­யான சட்­டம் பாயும் என்று பட்­னா­விஸ், புனே­யில் நடந்த நிகழ்ச்­சி­ ஒன்­றில் பேசு­கை­யில் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். படம்: த ஹிந்து -

புனே: மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் மிகப்­பெ­ரிய அள­வில் அதா­வது கிட்­டத்­தட்ட ரூ.6,000 கோடி­யில் முத­லீடு செய்­யப்­ப­ட­வி­ருந்த தொழிற்­சாலை கர்­நா­டகா மாநி­லத்­திற்­குச் சென்றுவிட்­டது. அதற்­குக் கார­ணம் பணம் கேட்டு மிரட்­டல் விடுத்­த­து­தான் என்று கூறி­யுள்­ளார் மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தின் துணை முதல்­வர் தேவேந்­திர பட்­னா­விஸ்.

அவ்­வாறு, முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் பணம் கேட்டு மிரட்­டி­ய­வர்­கள் யாராக இருந்­தா­லும் அவர்­கள்­மீது கடு­மை­யான சட்­டம் பாயும் என்று பட்­னா­விஸ், புனே­யில் நடந்த நிகழ்ச்­சி­ ஒன்­றில் பேசு­கை­யில் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். மேலும் அவர், உத்­தவ் தாக்­கரே ஆட்­சி­யில் இருக்­கும்­போ­து­தான் அந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­த­தாக கூறி­னார்.

தொழி­ல­தி­பர் ஒரு­வர் தம்­மைச் சந்­தித்­ததா­க­வும், அவர் ரூ.6,000 கோடி முத­லீடு செய்து மகா­ராஷ்­டி­ரா­வில் தொழிற்­சாலை அமைக்­கத் திட்­ட­மிட்­டி­ருந்­த­தா­க­வும் அப்­போது பணம் கேட்டு தான் மிரட்­டப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்­தார். அத­னால்­தான் வேறு­வ­ழி­யின்றி தொழிற்­சாலை அமைக்­கும் திட்­டத்தை கர்­நா­ட­கா­வுக்கு மாற்­றி­ய­தாக அந்­தத் தொழி­ல­தி­பர் தெரி­வித்­தார் என பட்­னா­விஸ் கூறி­னார்.

"இந்த நிலைமை நீடித்­தால் மகா­ராஷ்­டிராவில் வேலை வாய்ப்பின்மை ஏற்படக்கூடும். இத­னால் முதலீட்டாளர்களிடம் பணம் கேட்டு மிரட்­டு­ப­வர்­கள் ஒடுக்­கப்­பட வேண்­டும்.

"எனவே இப்­ப­டிப்­பட்­ட­வர்­கள் மீது சாதி, மதம், அர­சி­யல் என அவர்­கள் சார்ந்­துள்ள அமைப்பு பற்றி கவலை கொள்­ளா­மல் கடும் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு காவல்­து­றைக்கு உத்­த­ர­விட்­டுள்­ளேன்," என்று பட்­னா­விஸ் தெரி­வித்­தார்.