1% செல்வந்தர்களிடம் 40.5% நாட்டின் வளம்

1% செல்வந்தர்களிடம் 40.5% நாட்டின் வளம்

1 mins read
d8f6b8db-5889-4cdc-abfa-34be54c82bc1
ஏழை, பணக்­கா­ரர்­க­ளி­டையே இருந்து வரும் மோச­மான சமத்­து­வ­மின்­மை­யைப் போக்க வேண்­டு­மெ­னில், செல்­வந்­தர்­களால் பயன்­படுத்­தப்­படும் ஆடம்­ப­ரப் பொருள்­க­ளுக்கு அதி­க­மான வரி விதிக்­க வேண்­டும். படம்: பிக்ஸாபே -

ஆக்ஸ்ஃபாம் நடத்திய ஆய்வின் அதிர்ச்சித் தகவல்

புது­டெல்லி: கடந்த 2021ஆம் ஆண்­டில் நாட்­டின் ஒட்­டு­மொத்த வளத்­தில் 40.5 விழுக்­காடு வளத்தை இந்­தி­யா­வின் ஒரு விழுக்­காட்டு செல்­வந்­தர்­கள் வைத்­தி­ருக்­கின்­ற­னர். எஞ்­சி­யுள்ள வளத்­தைத்­தான் மற்ற அனை­வ­ரும் பகிர்ந்­து­கொண்­டுள்­ள­னர். இந்த அதிர்ச்­சித் தக­வல் ஆக்ஸ்­ஃபாம் என்ற ஆய்வு நிறு­வ­னம் மேற்­கொண்ட ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

2020ஆம் ஆண்­டில் இந்­தி­யா­வில் மொத்­தம் 102 கோடீஸ்­வ­ரர்­களே இருந்­த­னர். ஆனால், கடந்த ஆண்­டில் அந்த எண்­ணிக்கை 166ஆக அதி­க­ரித்­துள்­ளது. அதேநேரத்தில், வறு­மைக்­கோட்­டில் உள்­ளோ­ரால் அடிப்­ப­டைத் தேவை­க­ளைக்­கூட பூர்த்தி செய்ய­ மு­டி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

ஏழை, பணக்­கா­ரர்­க­ளி­டையே இருந்து வரும் மோச­மான சமத்­து­வ­மின்­மை­யைப் போக்க வேண்­டு­மெ­னில், செல்­வந்­தர்­களால் பயன்­படுத்­தப்­படும் ஆடம்­ப­ரப் பொருள்­க­ளுக்கு அதி­க­மான வரி விதிக்­க வேண்­டும். அடிப்படைத் தேவைகளுக்கான வரியைக் குறைக்க வேண்டும் என்று இந்­தி­யா­வின் நிதி அமைச்சை அந்த அமைப்பு கேட்­டுக்கொண்­டுள்­ளது.

சுவிட்­சர்­லாந்­தின் டாவோ­ஸில் தொடங்­கி­யுள்ள உல­கப் பொரு­ளி­யல் கருத்­த­ரங்­கில் இந்­தத் தக­வல் வெளி­யி­டப்­பட்­டது.

இந்­தி­யா­வில் கடந்த 2012 முதல் 2021 ஆம் ஆண்டு வரை உரு­வாக்­கப்­பட்ட மொத்த வளங்­களில் 40 விழுக்­காட்­டுக்கு மேலான வளங்­கள் வெறும் ஒரு விழுக்­காட்­டி­ன­ரி­டம் உள்­ளன.

இந்­தி­யா­வின் பெரும் செல்­வந்­த­ரான கௌதம் அதா­னி­யின் சொத்­து­கள் கடந்த ஆண்­டில் மட்­டும் 46% அதி­க­ரித்­துள்­ளது. இது­போல இந்­தி­யா­வில் உள்ள 100 பெரும் செல்­வந்­தர்­கள் $600 பில்­லி­யன் சொத்­து­க­ளைக் கொண்­டுள்­ள­னர்.

2022ல் இந்­தி­யச் செல்­வந்­தர் அதானி உல­கத்­தின் பணக்­கா­ரர்­கள் பட்­டி­ய­லில் இரண்­டாம் இடத்­தைப் பிடித்­துள்­ள­தாக அண்­மை­யில் புளூம்­பெர்க்­கின் ஆய்­வ­றிக்கை தெரி­வித்­தது.