ஏழைகளே அதிகம் வரி செலுத்துகிறார்கள்

ஏழைகளே அதிகம் வரி செலுத்துகிறார்கள்

2 mins read
52828bce-7626-4f9c-b131-57bebd20a22e
நாட்­டில் விதிக்­கப்­படும் வரி­க­ளுக்கு செல்­வந்­தர்­க­ளைக் காட்­டி­லும் ஏழை­களும் நடுத்­தர மக்­க­ளுமே அதி­கம் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். படம்: பிக்ஸாபே -

இந்­தி­யா­வில் செல்­வந்­தர்­கள்­தான் அதி­க­ள­வில் வரி செலுத்­து­கின்­ற­னர் என்ற ஒரு மாயத் தோற்­றத்தை உடைக்­கும் வகை­யில் ஆக்ஸ்­ஃபாம் ஆய்­வின் முடி­வு­கள் வெளியாகியுள்ளன.

நாட்­டில் விதிக்­கப்­படும் வரி­க­ளுக்கு செல்­வந்­தர்­க­ளைக் காட்­டி­லும் ஏழை­களும் நடுத்­தர மக்­க­ளுமே அதி­கம் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். அவர்­களே நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ அதி­க­ள­வில் வரி செலுத்­து­கின்­ற­னர் என்­றும் ஆக்ஸ்­ஃபாம் ஆய்­வ­றிக்கை தெரி­வித்­துள்­ளது.

தோராய­மாக 64 விழுக்­காடு பொருள் சேவை வரிப் பணத்­தில் 50 விழுக்­காட்டு வரிப்­ப­ணம் ஏழை எளி­ய­வர்­க­ளி­டம் இருந்து வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. நாட்­டின் முன்­ன­ணிப் பணக்­கா­ரர்­கள் 10 விழுக்­காட்­டி­ன­ரி­டம் இருந்து வெறும் 4% வரியே பெறப்­ப­டு­கிறது என்­றும் அந்த அறிக்கை தெரி­விக்­கிறது.

இந்த ஆய்­வ­றிக்கை, மக்­கள் தொகை­யில் 50 விழுக்­காட்­டிற்­கும் மேற்­பட்ட ஏழை மற்­றும் நடுத்­தர வர்க்க மக்­களே பெரும்­பாலான மறை­முக வரியை அல்­லது நுகர்­வோர் தொடர்­பான வரி­க­ளைச் செலுத்­து­கின்­ற­னர் என்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­கக் கூறு­கிறது.

இந்த ஆய்­வ­றிக்­கை­யின்­படி, மொத்த பொருள் சேவை வரித் தொகை­யில், மூன்­றில் இரண்டு பங்­குக்­கும் மேற்­பட்ட தொகையை அதா­வது 64.3 விழுக்­காட்டு வரி­யைச் செலுத்­து­வது அடித்­தட்டு மக்­கள்­தான்.

இதில் மூன்­றில் ஒரு பங்­குத் தொகையை நடுத்­தர மக்­களும், வெறும் 3-4% ஜிஎஸ்டி தொகை­யைத்­தான் நாட்­டில் வாழும் பணக்­கா­ரர்­களும் செலுத்­து­கி­றார்­கள்.

2021 - 22ஆம் ஆண்­டில் அர­சாங்­கம் வசூ­லித்த மொத்த பொருள் சேவை வரி ரூ.14.7 லட்­சம் கோடி. 2022 - 23ஆம் நிதி­யாண்­டில் இது ரூ.18 லட்­சம் கோடியை எட்­டும் என்று கூறப்­படு­கிறது.

அதா­வது, குறைந்த வரு­வாய் ஈட்­டும் மக்­கள்­தான் மறை­முக வரி­யை அதி­கம் செலுத்­து­கின்­ற­னர்.

நடுத்­தர மக்­கள்­கூட 40 விழுக்­காடு மறை­முக வரி­யைத்­தான் செலுத்­து­கின்­ற­னர் என்­றும் அறிக்கை தெரி­விக்­கிறது. அதா­வது, அனைத்து இந்­திய அள­வில் குறைந்த வரு­வாய் ஈட்­டும் மக்­களே 6 மடங்கு அதிக மறை­முக வரி செலுத்­து­கின்­ற­னர்.

எனவே, மத்­திய அரசு அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளுக்­கான ஜிஎஸ்டி வரி­யைக் குறைக்க வேண்­டும் என்­றும், அதி­லும் குறிப்­பாக ஏழை மற்­றும் நடுத்­தர மக்­கள் அதி­கம் வாங்­கும் பொருள்­க­ளுக்­கான பொருள் சேவை வரி­யைக் குறைக்க வேண்­டும் என்­றும் அந்த அறிக்கை வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அதே­வே­ளை­யில், ஆடம்­ப­ரப் பொருள்­க­ளின் வரியை உயர்த்­த­லாம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம், வரு­வா­யை­யும் பெருக்க முடி­யும், ஏழை­க­ளின் சுமை­யும் இயல்­பா­கக் குறைக்­கப்­பட்டு, அவர்­க­ளின் வாங்­கும் திறன் அதி­க­ரிக்க உத­வும் என்­றும் அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.