மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்

மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்

2 mins read
37e6c44d-d992-4535-8c7d-f39e4d0106da
-

புது­டெல்லி: நாகலாந்து, மேகா­லயா, திரி­புரா ஆகிய மூன்று மாநி­லங்­களில் விரை­வில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. இந்த மூன்று மாநி­லங்­க­ளுக்­கான தேர்­தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறி­வித்தது.

இந்­நி­லை­யில், திரிபுரா மாநில சட்­ட­மன்­றத் தேர்­தல் வரும் பிப்­ர­வரி, 16ஆம் தேதியும், நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27ஆம் தேதியும் தேர்­தல்­நடை­பெ­றும் என தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

திரி­புரா மாநில சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கான வேட்புமனுத் ­தாக்­கல் ஜன­வரி 21ஆம் தேதி தொடங்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வேட்புமனு பரி­சீ­லனை ஜன­வரி 31ஆம் தேதி­யும், வேட்புமனுவை பிப்­ர­வரி 2ஆம் தேதி மீட்­டுக்­கொள்­ள­லாம் என்­றும் ஆணை­யம் தெரி­வித்­தது.

மூன்று மாநி­லங்­க­ளுக்­கும் ஆன சட்­ட­மன்­றத் தேர்­த­லின் வாக்கு எண்­ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடை­பெ­றும்.

அம்­மா­நி­லங்­களில் தேர்­தல் தேதி அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தால், தேர்­தல் விதி­மு­றை­கள் உட­ன­டி­யாக நடப்புக்கு வரு­வ­தாக தேர்தல் ஆணையம் அறி­வித்துள்ளது.

நாக­லாந்து, மேகா­லயா, திரி­புரா ஆகிய மூன்று மாநி­லங்­க­ளி­லும் பார­திய ஜனதா கட்சி கூட்­டணி ஆட்சி நடை­பெற்று வரு­கிறது. நாக­லாந்து மாநி­லத்­தில் பாஜக - நாகா மக்­கள் முன்­ன­ணி­யின் கூட்­டணி ஆட்சி நடந்து வரு­கிறது. இங்கு நாகா மக்­கள் முன்­ன­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த நெப்­பியூ ரியோ முதல்­வ­ராக உள்­ளார்.

மேகா­ல­யா­வில் பாஜக - தேசிய மக்­கள் கட்சி கூட்­டணி ஆட்சி நடந்து வரு­கிறது. இங்கு முதல்­வ­ராக தேசிய மக்­கள் கட்­சி­யைச் சேர்ந்த கான்­ராட் சங்மா உள்­ளார்.

திரி­புரா மாநி­லத்­தில் பாஜக ஆட்சி நடை­பெற்று வரு­கிறது. இங்கு மாணிக் சாகா முத­ல­மைச்­ச­ராக உள்­ளார்.

இந்த மூன்று மாநி­லங்­க­ளி­லும் விரை­வில் சட்­ட­மன்­றப் பத­விக் காலம் முடி­வ­டைய உள்­ளது. நாக­லாந்து மாநி­லத்­தில் மார்ச் 12, மேகா­லாயா மாநி­லத்­தில் மார்ச் 15 மற்­றும் திரி­புரா மாநி­லத்­தில் மார்ச் 22 ஆகிய தேதி­களில் சட்­ட­மன்­றப் பத­விக் காலம் முடி­வ­டை­கிறது. இத­னால் இந்த மாநி­லங்­க­ளுக்கு சட்­ட­மன்றத் தேர்­தல் நடை­பெற உள்ள தேதியை இந்­திய தலை­மைத் தேர்­தல் அதி­காரி ராஜீவ் குமார் நேற்று அறி­வித்­தார்.