திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கட்டுப்படுத்த முடியாத வகையில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்குத் தனியாகச் செல்லும் மாணவ, மாணவிகள் பலரையும் தெரு நாய்கள் துரத்தித் துரத்தி கடிக்க வருகின்றன.
தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசுக்கு நெருக்கடி வந்தநிலையில் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கோழிக்கோடு, அரசு தொழிற்பயிற்சிப் பள்ளி மாணவர் ஆண்டோ ஜாய், மாணவி பிரார்த்தனா கோஷ் ஆகியோர், ஆசிரியை ஒருவரின் துணையுடன் நாயைத் துரத்துவதற்குக் கருவி ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
அந்த மாணவர்கள் 'அல்ட்ரா சவுண்ட்' ஒலி எழுப்பும் கருவி ஒன்றை உருவாக்கினர். இந்த கருவியில் இருந்து எழும் 'அல்ட்ரா சவுண்ட்' ஒலியைக் கேட்டால் நாய்கள் தெறித்து ஓடுவதைக் கண்டுபிடித்தனர். அதையடுத்து அவர்கள், அதுபோன்ற ஒலியெழுப்பும் கருவியைத் தயாரிக்க முடிவுசெய்தனர். ஆசிரியை துணையுடன், கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்தில் நாய் விரட்டும் கருவியைத் தயாரித்தனர்.
இப்போது அந்தத் தெரு நாய்கள் மாணவர்களைக் கண்டு ஓட்டம் பிடிக்கிறதாம்.

