ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் தலைப்பொங்கல் பண்டிகைக்குப் பல்வகை உணவு வகைகளைச் சமைத்து விருந்தளித்து மருமகனின் மனம் குளிரவைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
அவ்வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மணமுடித்த தம்பதியர் குஷ்மாவுக்கும் பொறியாளர் முரளிதருக்கும் பெண்ணின் தந்தையான தொழிலதிபர் பீமா ராவ், இனிப்பு, காரம் உள்ளிட்ட 379 வகை பல்சுவை உணவு சமைத்து ஊரே வியக்குமாறு பரிமாறினார்.

