கெஜ்ரிவால்: நம் பிள்ளைகளின் கல்வியை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்

கெஜ்ரிவால்: நம் பிள்ளைகளின் கல்வியை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்

2 mins read
09eabd0d-8df6-4afe-a68a-129d827c00d5
தொடக்கப் பள்ளி ஆசி­ரி­யர்­கள், பின்­லாந்து நாட்­டில் பயிற்­சி­பெ­று­வ­தற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­ததை ஆளு­நர் தடுத்து நிறுத்­தி­ய­தாக கெஜ்­ரி­வால் குற்றம் சாட்டினார். படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: டெல்லி மாந­க­ராட்சி தேர்­த­லில் 104 வார்­டு­கள் பாஜக வெற்­றி­பெறுவதற்கு தானே முழுக் கார­ணம் என்று துணை­நிலை ஆளு­நர் வி.கே.சக்­சேனா கூறி­ய­தாக முத­ல­மைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் துணை நிலை ஆளு­நர் சக்­சே­னா­வுக்­கும் ஆளும் ஆம் ஆத்மி அர­சுக்­கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலை­யில், டெல்லி தொடக்கப்பள்ளி ஆசி­ரி­யர்­களை பின்­லாந்­து நாட்டுக்கு அனுப்பி அங்­குள்ள கற்பிக்கும் முறை குறித்த பயிற்சிபெற வைக்க வேண்­டும் என அர­விந்த் கெஜ்­ரி­வால் அண்மையில் உத்­த­ர­விட்­டி­ருந்­தார். ஆனால், அந்த திட்­டத்­திற்கு ஒப்­பு­தல் தராத துணை நிலை ஆளு­நர் வி.கே.சக்­சேனா, இந்­தி­யா­வி­லேயே பயிற்சி வழங்கு­வது குறித்து டெல்லி அரசுக்குப் பரிந்துரை செய்தார்.

டெல்லி சட்­ட­மன்­றத்­தில் பேசிய கெஜ்ரிவால், துணைநிலை ஆளு­நர் வி.கே.சக்­சேனா மீது சர­மா­ரி­யாக புகார் தெரி­வித்­தார். தொடக்கப் பள்ளி ஆசி­ரி­யர்­கள், பின்­லாந்து நாட்­டில் பயிற்­சி­பெ­று­வ­தற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­ததை ஆளு­நர் தடுத்து நிறுத்­தி­ய­தாக கெஜ்­ரி­வால் குற்றம் சாட்டினார்.

பள்ளி மாண­வர்­க­ளின் வாழ்க்­கை­யு­டன் ஆளு­நர் சக்­சேனா விளை­யா­டு­வ­தாக அவர் கூறி­னார்.

இப்போது இங்கு காலனித்துவ ஆட்சி நடக்­க­வில்லை என்­றும், மக்­கள் ஆட்சி நடப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

டெல்லி ஆளு­ந­ருக்கு உள்ள அதி­கா­ரம் பற்றி உச்­ச­நீதி மன்­றம் தெளி­வா­கச் சுட்­டிக்­காட்­டிய பிற­கும் தொடர்ச்­சி­யாக இது­போன்ற பிரச்­சி­னை­கள் வளர்ந்து வரு­கின்­றன.

சட்­ட­மன்ற விவா­தத்­தின் போது பேசிய கெஜ்­ரி­வால், "எனது பணி­களை ஆளு­நர் உன்­னிப்­பா­கக் கவ­னிப்­ப­து­போல், தனது பள்­ளிக்­கூட ஆசி­ரி­யர் கூட தனது வீட்­டுப்­பா­டத்தைச் சரி­பார்த்­தது இல்லை," என தெரி­வித்­தார். "தான் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முத­ல­மைச்­சர் என்­றும், ஆனால், இந்த துணை நிலை ஆளு­நர் யார் என்­றும் கேள்வி எழுப்­பிய கெஜ்­ரி­வால், நமது குழந்­தை­கள் எப்­படி படிக்க வேண்­டும் என்­பதை தீர்­மா­னிக்க அவர் யார்?" என்­றும் விமர்­சித்­தார்.