'தண்ணீர்ப் போர்' தொடுக்கும் சீனா: பதிலடிக்குத் தயாராகும் இந்தியா

'தண்ணீர்ப் போர்' தொடுக்கும் சீனா: பதிலடிக்குத் தயாராகும் இந்தியா

2 mins read
9240e775-98bd-475a-a7ff-589722a69767
பிரம்­ம­புத்­திரா நதி­யின் குறுக்கே அணை­க­ளைக் கட்­டு­வ­தன் மூலம் இந்­தி­யா­வுக்கு புதிய நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்த சீனா முயற்சி செய்­வ­தாக கரு­தப்­ப­டு­கிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: இந்­தி­யா­வு­டன் 'தண்­ணீர்ப் போர்' நடத்த சீனா தயா­ராகி வரு­வ­தாக இந்­திய ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. இது தொடர்­பான சீனா­வின் செயல்­பாடு­களை எதிர்­கொள்ள இந்­தியா தன்னை தயார்­ப்ப­டுத்தி வரு­வ­தாக உலக அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

பிரம்­ம­புத்­திரா நதி­யின் குறுக்கே பிரம்­மாண்­ட­மான அணை­யைக் கட்டி வரு­கிறது சீனா. இதற்­குப் பதி­லடி கொடுக்­கும் வகை­யில் இந்­தி­யா­வும் சில நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது.

அரு­ணாச்­ச­லப் பிர­தே­சத்­தில் நடை­பெற்று வரும் புதிய அணைக்­கான கட்­டு­மா­னப் பணி­களை இந்­தியா வேகப்­ப­டுத்தி உள்­ளது.

பிரம்­ம­புத்­திரா நதி­யின் குறுக்கே அணை­க­ளைக் கட்­டு­வ­தன் மூலம் இந்­தி­யா­வுக்கு புதிய நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்த சீனா முயற்சி செய்­வ­தாக கரு­தப்­ப­டு­கிறது. ஏற்­கெ­னவே கடந்த 2015ஆம் ஆண்டு பிரம்­ம­புத்­திரா நதி­யின் குறுக்கே ஏறத்­தாழ ரூ.1.22 லட்­சம் கோடி செல­வில் சீனா பிரம்­மாண்ட அணை­யைக் கட்­டி­யுள்­ளது.

இதை­ய­டுத்து மேலும் ஓர் அணை­யைக் கட்­டு­வ­தற்­கான பணி­களை மேற்­கொண்டு வரு­கிறது.

சில இந்­திய மாநி­லங்­க­ள் தண்­ணீர், மின்­சா­ரத் தேவை­க­ளுக்­குப் பிரம்­ம­புத்­திரா நதி­யைத்­தான் நம்பி உள்­ளன. எனி­னும் இந்­ந­தி­யின் ஐம்­பது விழுக்­காடு பரப்பு சீனா­வில் இருப்­ப­தால், அந்­நாடு தன்­னிச்­சை­யாக மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­களை இந்­தி­யா­வால் தடுக்க முடி­ய­வில்லை.

சீனா இரண்டாவது அணை­யைக் கட்டிய பின்­னர் பிரம்­மபுத்­திரா நதியை நம்­பி­யுள்ள இந்­திய மாநி­லங்­களில் கோடைக்­கா­லங்­களில் கடும் தண்­ணீர்ப் பஞ்­ச­மும் மழைக்­கா­லங்­களில் பெரும் வெள்­ளப்­பெருக்­கும் ஏற்­ப­டக்­கூ­டும் என்­கி­றார்­கள் சூழ­லி­யல் நிபு­ணர்­கள்.

இந்­தி­யா­வைப் போல் அதன் அண்டை நாடான பங்­ளா­தே­ஷும் இதே­போன்று பாதிக்­கப்­படும் என்று கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், பிரம்­ம­புத்­திரா நதி­யின் குறுக்கே இந்­தியா கட்­டும் புதிய அணை­யால் வெள்ள அபா­யத்­தில் இருந்து இந்­திய மாநி­லங்­கள் தப்­பித்­து­வி­டும் என்­றும் நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

இரு நாடு­க­ளின் எல்­லைப் பகு­தி­களில் சீனா அணை கட்­டு­வது, சாலை அமைத்­தல் உள்­ளிட்ட பல்­வேறு கட்­டு­மா­னப் பணி­களை மேற்­கொண்டு வரும் நிலை­யில், இந்­தி­யா­வும் அதே­போன்ற நட­வ­டிக்­கை­க­ளின் மூலம் பதி­லடி கொடுத்து வரு­கிறது.

இதற்காக இரு நாடுகளும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு வருகின்றன.

இந்தியாவின் அருணாச்சாலப் பிரதேச மாநிலத்தில் சில பகுதிகளை சீனா தனக்குரியது என கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் அம்மாநிலத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.