புதிய அணி: பாஜகவுக்கு எதிராக முழங்கிய முதல்வர்கள்

புதிய அணி: பாஜகவுக்கு எதிராக முழங்கிய முதல்வர்கள்

2 mins read
1124c269-85e5-4110-9abd-e5f5be9fe249
-

ஹைத­ரா­பாத்: தெலுங்­கானா மாநி­லத்­தில் நான்கு மாநில முதல்­வர்­கள் பங்­கேற்ற பிரம்­மாண்­டப் பொதுக்­கூட்­டம் தேசிய அள­வில் புதிய கூட்­ட­ணிக்கு அடித்­த­ள­மிட்­டுள்­ள­தாக அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

பாஜ­க­வுக்கு எதி­ராக கூட்­டணி அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களைத் தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் தீவி­ரப்­ப­டுத்தி உள்ள நிலை­யில், தெலுங்­கானா பொதுக்­கூட்­டத்­தி்ல் பேசிய நான்கு மாநில முதல்­வர்­களும் மத்­திய அர­சை­யும், பிர­த­மர் மோடி­யை­யும் சர­மா­ரி­யாக விமர்­சித்­த­னர்.

அப்பொதுக்­கூட்­டத்­தில் பேசிய முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ், நாட்­டில் நில­வும் நதி­நீர்ப் பங்­கீடு உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­திய பாஜக அர­சு­தான் கார­ணம் என சாடி­னார்.

தாம் தலைமையேற்றுள்ள பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆதரவில் அமையும் புதிய மத்திய அரசு, ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் என்றார் அவர்.

தற்­போது நாடு மாற்­றத்தை விரும்­பு­கிறது என்­றும் எதிர்­வ­ரும் 2024ஆம் ஆண்டு மக்­க­ள­வைத் தேர்­த­லா­னது அத்­த­கைய மாற்­றத்தை ஏற்­ப­டுத்த மக்­க­ளுக்கு கிடைக்­கும் நல்ல வாய்ப்பு என்­றும் டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் கூறி­னார்.

மதச்­சார்­பின்மை, ஜன­நா­ய­கம், நாட்­டின் அர­சி­யல் சாச­னத்­தைக் காக்க ஒரு புதிய எதிர்ப்பு தேவை என்று கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் வலி­யு­றுத்­தி­னார்.

உத்­த­ரப் பிர­தேச முன்­னாள் முதல்­வ­ரும் சமாஜ்­வாடி கட்சித் தலை­வ­ரு­மான அகி­லேஷ் யாதவ், மத்­தி­யில் உள்ள பாஜக அரசு தனது நாள்­களை எண்­ணிக்­கொண்­டி­ருக்­கிறது என்­றும் தற்­போ­தைய ஆட்­சிக்­கா­லத்­தைக் கடந்து அது நீடிக்­காது என்­றும் குறிப்­பிட்­டார்.

நாட்­டில் ஏரா­ள­மான இளை­யர்­கள் உரிய வேலை வாய்ப்­பு­கள் இன்றி தவிப்­புக்கு ஆளாகி உள்­ள­தாக பஞ்­சாப் மாநில முதல்­வர் பக­வந்த் மான் கூறி­னார்.

நாடு புதிய வேலை­வாய்ப்­பு­களை எதிர்­பார்ப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், மத்­திய அரசு இது தொடர்­பாக எந்த நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­ள­வில்லை என்று சாடி­னார்.

இந்­திய கம்­யூ­னிஸ்ட் உள்­ளிட்ட மேலும் சில கட்­சி­க­ளைச் சேர்ந்த முக்­கிய பிர­மு­கர்­களும் இந்­தப் பொதுக்­கூட்­டத்­தில் பேசி­னர்.

தேசிய அள­வில் பாஜ­க­வுக்கு எதி­ராக புதிய அணியை உரு­வாக்க முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் மேற்­கொண்­டுள்ள இந்த முயற்சி பீகார் முதல்­வர் நிதிஷ்­கு­மா­ருக்கு அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தி உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அவ­ரும் இத்­த­கைய முயற்­சியை மேற்­கொண்­டுள்­ள­தால், சந்­தி­ர­சே­கர ராவின் அர­சி­யல் நகர்­வு­க­ளுக்கு அவர் எதிர்ப்பு தெரி­விப்­பார் எனக் கரு­தப்­ப­டு­கிறது.